மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. அசத்தலான டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளில் வந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

இந்த நிலையில், மோட்டார் ராலி பந்தயத்திற்கான சிறப்பு அம்சங்களுடன் கூடிய எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் படங்களை மஹிந்திரா அட்வென்ச்சர் பிரிவு வெளியிட்டு இருக்கிறது. 2019 தேசிய ராலி சாம்பியன்ஷிப் ராலி பந்தயத்தில் இந்த புதிய எக்ஸ்யூவி300 ராலி ரேஸ் மாடல் பயன்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் இரண்டு எக்ஸ்யூவி300 கார்கள் விசேஷ அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ராலி ரேஸ் மாடலின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொாருத்தப்பட்ட மாடலை பிரபலமான ராலி ரேஸ் வீரர் கவுரவ் கில் ஓட்ட இருக்கிறார். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை அமித்ரஜித் கோஷ் ஓட்ட இருக்கிறார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

இந்த இரண்டு கார்களின் எஞ்சின்களுக்கான இசியூ கட்டுப்பாட்டு சாஃப்ட்வேர் அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ரீமேப் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலில் அதிக செயல்திறன் மிக்க டர்போசார்ஜர் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

எடை குறைப்பிற்காக பின் இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், எஞ்சின், சஸ்பென்ஷன், புகைப்போக்கி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கவுரல் கில் பயன்படுத்தப்பட இருக்கும் பெட்ரோல் மாடலில் ஜேகே டயர்களும், அமித்ரஜித் கோஷ் ஓட்டும் மாடலில் எம்ஆர்எஃப் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 ராலி ரேஸ் மாடலில் பிரத்யேகமான வண்ணக் கலவை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையான ரோல்கேஜ், பக்கெட் இருக்கைகள், புதிய டேஷ்போர்டு மற்றும் அளவில் சிறிய ஸ்டீயரிங் வீல்கள் உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

கடந்த பல ஆண்டுகளாக தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் பயன்படுத்தப்பட்டு வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக, இந்த புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி பயன்படுத்தப்பட இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிகள் கோவையில் வைத்து சோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்டன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ராலி ரேஸ் மாடல் அறிமுகம்!

இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் சென்னையில் நடக்க இருக்கும் தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்த எஸ்யூவிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த கார்களின் செயல்திறன் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிய மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Source: Sirish Chandran FB page

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2019, 13:50 [IST]
English summary
Mahindra Adventure has released images of rally-spec XUV300 replacing the erstwhile Super XUV500 the team has raced for several years.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+