துடிப்பான இசையில் ராப் பாடலை வெளியிட்ட மஹிந்திரா... எதற்காக பாடலை வெளியிட்டது தெரியுமா...?
துடிப்பான இசையில் ராப் பாடல் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதற்காக இந்த பாடலை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம், அண்மையில் எக்ஸ்யூவி300 எஸ்யூவி ரக காரை விற்பனைக்காக அறிமுகம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்த காரை புரமோட் செய்யும்விதமாக பிரபல பாலிவுட் பாடகர் பாட்ஷா மூலம் பாடல் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

மஹிந்திராவின் இந்த புத்தம் புதிய எக்ஸ்யூவி300 மாடல் கார் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று விற்பனைக்கு அறிமுகமானது. அவ்வாறு அறிமுகமான முதல் மாதத்திலேயே 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகளை இந்த எக்ஸ்யூவி300 மாடல் பெற்று சாதனைப் படைத்தது. இது, தவிர்த்து இந்த கார் குறித்த தகவலை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விசாரித்ததாக மஹிந்திரா டீலர்கள் தகவல்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரானது பெட்ரோல் மற்றும் டீசல் என 2 எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அந்த வகையில் பெட்ரோல் வேரியண்டில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினானது, அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இவை இரண்டுமே 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் இயங்குபவை. மேலும், இந்த காரின் முன்பக்க சக்கரங்கள் இயங்கும் தன்மைக் கொண்டவை. ஆனால், இதில் அனைத்து சக்கரங்கள் சுழலும் திறன் கொடுக்கப்படவில்லை.

மஹிந்திராவின் இந்த புத்தம் புதிய எஸ்யூவி காரின் பெட்ரோல் வேரியண்ட் ரூ. 7.9 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதேபோன்று, டீசல் வேரியண்ட் ரூ. 8.5 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த எக்ஸ்யூவி300 மாடலில் பல்வேறு சிறப்பம்சங்ள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இந்த செக்மெண்டில் வெளிவந்துள்ள காரில் இதுதான் அதிக செழிப்பான காராக இருக்கிறது.

இந்நிலையில் தான், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இந்த புதிய மாடல் காரை புரமோட் செய்யும் விதமாக இந்தியன் ரேப் பாடகர் பாட்ஷா மூலம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்த பாடலானது, காரை விளம்பரத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காரின் சிறப்பம்சங்கள் நவீன வசதி உள்ளிட்டவைப் பற்றி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.
2.30 நிமிடங்கள் உள்ள அந்த பாடல் மிகவும் துடிப்பான இசையில் ஆரம்பிக்கிறது. ஆனால், ஹிந்தி மொழியில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. இதன் இசை மிகவும் துடிப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திராவின் இந்த புதிய முயற்சி வரவேற்கதக்கதாக இருக்கிறது. ஆனால், சில நெட்டிசன்கள் இதனைக் கலாய்த்தவாறு மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








