காதலர் தினத்துக்காக காத்திருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300: வரவேற்பை அளித்த இந்தியர்கள்!
மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் கார் வருகின்ற 14ம் தேதி விற்பனைக்கு வெளிவரவுள்ள நிலையில், 4 ஆயிரம் யூனிட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புத்தம் புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடலை வருகின்ற 14ம் தேதி முதல் விற்பனை செய்ய உள்ளது. எஸ்யூவி ரக கார்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனம், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ் மற்றும் ஹுண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிறப்பான முறையில் எக்ஸ்யூவி300 காரை தயாரித்துள்ளது.
சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்யூவி300 காரானது மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடலில் சிறந்த பாதுகாப்பு அம்சமாக 7 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மூன்று முனை சீட் பெல்டுகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், சைல்ட் சீட் மவுண்டுகள், மின்சார ஸ்டெபிளிட்டி அமைப்பு உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி மஹிந்திரா எக்ஸ்யூவி300 பல்வேறு சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. அவை, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம். அதில், புளுடூத் இணைக்கும் வசதி, வாய்ஸ் கமெண்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், ஐந்து இருக்கை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி W4, W6, W8, மற்றும் W8 ஆப்ஷனல் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வருகிறது. அத்துடன் ரெட் ரேஜ், சன் பர்ஸ்ட் ஆரஞ்ச், டிசாட் சில்வர், பிரேக் ஒயிட், நபோலி பிளாக் மற்றும் அக்வாமரைன் ஆகிய ஆறு கலர்களில் இந்த கார் கிடைக்கும்.

மேலும், இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினிலும் கிடைக்கிறது. அதில், 110 குதிரைத் திறன் கொண்ட 200Nm டார்க்கையூவை வழங்கக்கூடிய 1.2 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, லிட்டருக்கு 17 கிமீ மைலேஜைக் கொடுக்கும். மேலும், 117 குதிரைத்திறன் கொண்ட 300Nm டார்க்யூவை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, லிட்டருக்கு 20 கிமீ மைலேஜை அளிக்கும்.

மஹிந்திராவின் இந்த புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது வருகின்ற பிப்ரவரி மாதம் 14ம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 7 லட்சம் முதல் 12 லட்சம் வரை வேரியண்ட்களுக்கு ஏற்ப இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து, விற்பனைக்கு வெளியே வருவதற்கு முன்னதாகவே 4 ஆயிரம் யூனிட் கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வருகையானது, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களின் விற்பனைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications









