மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்த கவரவ் கில்!

கார் சாகசத்தில் புகழ்பெற்ற கென் பிளாக் பாணியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்து அசத்தி இருக்கிறார் பிரபல ராலி ரேஸ் கார் பந்தய வீரர் கவுரவ் கில்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்த கவரவ் கில்!

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல் அடுத்த மாதம் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மினி எக்ஸ்யூவி500 எஸ்யூவி போன்ற டிசைன் தாத்பரியங்களுடன் அசத்தலாக இருக்கும் இந்த புதிய எஸ்யூவியை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்த கவரவ் கில்!

ஆம். அமெரிக்காவை சேர்ந்த சாகச கார் பந்தய வீரர் கென் பிளாக்கின் ஜிம்கானா வரிசை வீடியோக்கள் உலக அளவில் கார் பிரியர்களின் கவனம் ஈர்த்தவை. இதே பாணியில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்த கவரவ் கில்!

இந்தியாவின் பிரபல ராலி ரேஸ் கார் பந்தய வீரரான கவுரவ் கில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பராமக்கிரமங்களை சோதிக்கும் விதத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்த கவரவ் கில்!

கென் பிளாக்கின் ஜிம்கானா வீடியோக்களை போலவே, தடைகளுடன் கூடிய களத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியை டிரிஃப்ட அடித்து அசத்துகிறார் கவுரவ் கில். பெண் ஒருவர் வீடியோ எடுக்க முற்படுவது போலவும், அவரிடமிருந்து தப்பும் வகையில் அதிவேகத்தில் எக்ஸ்யூவி300 எஸ்யூவியை விரட்டி சென்று கரடுமுரடான சாலைகளில் செலுத்துகிறார்.

MOST READ: சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்த கவரவ் கில்!

அதாவது, சாலை மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி சிறப்பாக எதிர்கொள்ளும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்்டு இருக்கிறது. ராலி ரேஸ் ஓட்டும் கவுவர் கில்லின் கைகளின் அசைவுகளுக்கு ஏற்ப துல்லியமாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி செயல்படுவது போலவும் எடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் டிரிஃப்ட் அடித்த கவரவ் கில்!

இறுதியில் டயரில் தீப்பிழப்புடன் எக்ஸ்யூவி300 எஸ்யூவி சீறி பாய்ந்து செல்வது போல இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, "சாலைகளில் தீயை மூட்டுவோம்" என்ற தாரக மந்திரத்தை உணர்த்துவதுபோல முடிவு சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ கார் பிரியர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

MOST READ: பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினின் திறனை பரைசாற்றுவது போலவும் வீடியோவில் கருத்து சொல்லப்படுகிறது. ஏனெனில், இந்த எஞ்சின் 120 ரபிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என்பதால், இதன் ரகத்தில் சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் ஆப்ஷனாக இருக்கும்.

Most Read Articles

Tamil
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has released a new television commercial for the XUV300 which shows the upcoming compact SUV being drifted around like a boss by ace rally driver Gaurav Gill. The video also reveals the tagline of 'Set the Roads on Fire' for the Mahindra XUV300, which will arrive with the most powerful petrol and diesel engines in its class when it launches on February 14, 2019.
Story first published: Saturday, January 19, 2019, 11:36 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more