மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாறி இருக்கிறது. ஆளுமையான தோற்றம், எக்கச்சக்க வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களை வசியம் செய்து வருகிறது.

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் மாடலானது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. வசதிகள், கியர்பாக்ஸ், விலை அடிப்படையில் W4, W6, W8, W(O) ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில், W4 என்ற பேஸ் வேரியண்ட்டில் பெட்ரோல், டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. W6 வேரியண்ட்டின் பெட்ரோல், டீசல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைத்து வந்தது.

இந்தநிலையில், W6 என்ற நடுத்தர விலை டீசல் மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் குறைவான விலை டீசல் ஆட்டோமேட்டிக் மாடலாக இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த டீசல் ஏஎம்டி வேரியண்ட்டிற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டீசல் எஞ்சின் மற்றும் ஏஎம்டி தேர்வில் மிக சரியான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் W6 ஏஎம்டி வேரியண்ட்டில் கூடுதலாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது ரூ.8.10 லட்சம் முதல் ரூ.12.69 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுடன் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








