பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

சக்திவாயந்த புதிய டீசல் எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்காக, அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான எஞ்சின்களுடன் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.

பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

மேலும், தனது ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களில் புத்தம் புதிய டீசல் எஞ்சினை பயன்படுத்த இருக்கிறது மஹிந்திரா. அந்த வகையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. ஆனால், பிஎஸ்-6 மாடலில் இடம்பெற இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

இதனால், பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. இதுதவிர்த்து, மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் சோதனை செய்து வருகிறது. இந்த எஞ்சின் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: விளம்பரம் தேட போய் சிக்கலில் சிக்கிய இந்திய பைக் ரைடர்... ஆளை பிடித்து அதிரடி காட்டிய பூடான் போலீஸ்

பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாற்றங்களும் செய்து மேம்படுத்தப்படுகிறது.

MOST READ: இந்தியர்கள் தவமிருக்கும் காரை மனைவிக்கு அன்பு பரிசாக வழங்கிய கணவர்... எதற்காக தெரியுமா...?

பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

மேலும், புதிய மாடலின் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்து மஹிந்திரா அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. பம்பர், ஹெட்லைட், க்ரில், பின்புற பம்பர் ஆகியவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். ஆக மொத்தத்தில் மிகச் சிறந்த அம்சங்களுடன் களத்தில் இறங்க இருக்கிறது.

MOST READ: 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...

பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!

புதிய மாற்றங்கள், பிஎஸ்-6 எஞ்சின்களுடன் விலையும் சற்று அதிகமாக இருக்கும். டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் தொடர்ந்து போட்டி போடும். இது 7 சீட்டர் மாடலாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக உள்ளது.

Image Courtesy: Sarath Santham

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Indian automaker Mahindra, is actively testing their BS-VI models In India. The latest model to have spotted testing is the XUV500 SUV. The spy pic from Zigwheels reveal a XUV500 testing with 'BS6 Diesel' written on the fuel tank lid of the SUV.
Story first published: Saturday, October 19, 2019, 16:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X