தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனத்தின் சிறிய ரக எஸ்யூவி மாடலின் கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு பிற்பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மாருதி நிறுவனத்தின் புத்தம் புதிய மினி எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனத்தின் சிறிய ரக எஸ்யூவி மாடலின் கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. Future S என்ற பெயரிலான இந்த கான்செப்ட் மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

இந்த நிலையில், இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் நடப்பு ஆண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளயிட்டு இருக்கிறது. அதாவது, தீபாவளிக்கு முன்னதாக பண்டிகை கால பட்டியலில் மாருதியின் புதிய மினி எஸ்யூவியும் இடம்பெற இருப்பது தெரிய வந்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் மாருதி இக்னிஸ் காருக்கு இணையான வடிவமைப்பில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். டீசல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது என தெரிகிறது.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

தற்போது இந்த மினி எஸ்யூவி Y1K என்ற குறியீட்டுப் பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட விலை குறைவான மாடலாக வருவதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

எதிர்காலத்தில் இந்த மினி எஸ்யூவி பேட்டரியில் இயங்கும் மின்சார மாடலிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக குறைவான விலையில் மாருதி நிறுவனத்தின் எஸ்யூவி மாடலாக இருப்பதால் விற்பனையிலும் கலக்கும் என தெரிகிறது.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2018ம் ஆண்டில் மாருதியின் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சரிகட்டும் விதத்தில், 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஒரு டஜன் புதிய மற்றும் பொலிவு கூட்டப்பட்ட கார் மாடல்களை களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி!

இதன் துவக்கமாக நாளை மறுதினம் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, பல புதிய மாருதி கார் மாடல்கள் தொடர்ந்து வருகை தர இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, January 21, 2019, 10:58 [IST]
English summary
According to reports, Maruti is planning to launche all new mini suv this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+