பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

இதுவரை இல்லாத அளவுக்கு மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு சேமிப்புச் சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது. தீபாவளி சமயத்தில் ஆல்ட்டோ 800 காரை புக்கிங் செய்வதற்கும், வாங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோருக்கு இதுவே சரியான தருணமாக இருக்கும்.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி விற்பனையில் பெரும் தள்ளாட்டத்தை சந்தித்து வருகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை சற்றே முன்னேற்றம் கண்டிருந்தாலும், பழைய அளவுக்கு எழுச்சி பெறவில்லை. இதனால், தனது கார் மாடல்களுக்கு இதுவரை இல்லாத அளவு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

பொதுவாக சேமிப்புச் சலுகைகளை பெயரளவுக்கு கிள்ளி போட்டு வரும் மாருதி நிறுவனம் தற்போது பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, தனது அதிகம் விற்பனையாகும் மிக குறைவான விலை மாடலான ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

ஆல்ட்டோ 800 காருக்கு கன்ஸ்யூமர் ஆஃபர் என்ற பெயரில் ரூ.40,000 வரையில் தள்ளுபடியும், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.15,000 வரையிலும், கார்ப்பரேட் சலுகையாக ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.60,000 வரை சேமிக்கும் வாய்ப்பை மாருதி அறிவித்துள்ளது.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஸ்-6 மாசு உமிழ்வு தர விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், இருப்பில் உள்ள பிஎஸ்-4 கார்களை விற்று தீர்க்க பெரும்பாலான நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ரூ.60,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படும் ஆல்ட்டோ 800 காரில் பிஎஸ்-6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

எனவே, வாடிக்கையாளர்கள் யோசிக்காமல் ஆல்ட்டோ 800 காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. ஆல்ட்டோ 800 காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 800 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.3 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த கார் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் மாடலிலும் கிடைக்கிறது. இந்த மாடலில் இருக்கும் அதே 800 சிசி பெட்ரோல் எஞ்சின் 40.36 பிஎச்பி பவரையும், 60 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த காரில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் வழங்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டுகளில் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்படுகிறது. இந்த காரில் ஸ்மார்ட்ஃபோன் டாக்கிங் ஸ்டேஷன் வசதி, புளூடூத் இணைப்பு, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, ஏசி சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகிறது.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

புதிய ஆல்ட்டோ 800 காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி தொழில்நுட்பம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. சீட் பெல்ட் ரிமைன்டர் வசதியும், அதிவேகம் குறித்த எச்சரிக்கை செய்யும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பிஎஸ்-6 மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் ரூ.2.88 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய சேமிப்புச் சலுகைகள் மூலமாக இந்த காரை ரூ.2.28 லட்சம் என்ற மிக குறைவான எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அண்மையில் வந்த மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வருகையும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதால், மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு அதிக தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2019, 15:45 [IST]
English summary
Maruti Suzuki India Limited (MSIL) is offering their Alto BS-VI model with attractive discounts and benefits this October. The Alto BS-VI model is being offered with benefits of up to Rs 60,000 as part of the company's festive offer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+