பிஎஸ்6 என்ஜினுடன் மாருதி ஆல்டோ கே10 கார் சோதனை ஓட்டம்...
பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான என்ஜினுடன் மாருதி ஆல்டோ கே10 மாடல் கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மறைப்பும் இன்றி பிஎஸ்6 தரத்தை அளவிடும் கருவிகளுடன் இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மறைப்பு எதுவும் இல்லாமல் மாருதி ஆல்டோ கே10-ன் இந்த பிஎஸ்6 கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த காரில் என்ஜினை தவிர்த்து வேறு எந்த பாகமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

தற்சமயம் விற்பனையாகி வரும் மாருதி ஆல்டோ கே10 மாடல், 998சிசி என்ஜினுடன் 67.1 பிஎச்பி பவர் மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6-க்கு இந்த என்ஜின் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் இந்த வெளியிடும் ஆற்றலில் நிச்சயம் சிறிதளவிலாவது வித்தியாசம் இருக்கும்.

இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.3.61 லட்சத்தில் இருந்து ரூ.4.39 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த மாருதி ஆல்டோ கே10 கார் பிஎஸ்6 இணக்கமாக மாற்றப்படுவதால் ரூ.3.80 லட்சத்தில் இருந்து ரூ.4.60 லட்சம் வரை விலை அதிகரிக்கப்பட உள்ளது.

மாருதி நிறுவனம் ஆல்டோ கே10 மாடலை மட்டுமில்லாமல் எர்டிகா, எக்ஸ்எல்6, டிசைர், பலேனோ, ஸ்விஃப்ட், வேகன் ஆர், ஆல்டோ 800 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ கார்களையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகிறது.

இதில் ஆல்டோ 800 மாடலின் தயாரிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் மற்றொரு மாடலான வேகன் ஆர்-ஐ பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

மாருதி நிறுவனம், சிறிய அளவிலான கார்களின் பெட்ரோல் என்ஜின்களை தான் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றும் திட்டத்தில் உள்ளது. ஏனெனில் சிறிய அளவிலான கார்களின் டீசல் என்ஜின்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றி அதிக விலைக்கு விற்றால் வாடிக்கையாளர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என இந்நிறுவனம் நினைக்கிறது. இதனாலேயே டீசல் என்ஜினிற்கு பதிலாக பெட்ரோல் என்ஜினிற்கு மாறி வருகிறது.

மாருதி சுசுகி மட்டுமில்லாமல் ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனங்களாக உள்ள சில நிறுவனங்களும் சிறிய கார்களில் டீசல் என்ஜின்களை 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்க போவதில்லை என தீர்மானித்துள்ளன. பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் மற்றும் ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா போன்றவை சிறிய அளவிலான டீசல் கார்களின் தயாரிப்பை விரைவில் நிறுத்த திட்டமிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய அளவிலான டீசல் வேரியண்ட் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் என்கிற அறிவிப்பு மாருதி சுசுகி நிறுவனத்தின் இருந்து சமீபத்தில் தான் வெளிவந்தது. ஆனால் அதற்குள் சுறுசுறுப்பாக பெட்ரொல் என்ஜின்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து ஒவ்வொரு மாடலாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தி வருகிறது.

பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ள இந்த மாருதி ஆல்டோ கே10 காரின் இந்திய அறிமுக விலை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எப்படியோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையை தான் மாருதி நிறுவனம் நிர்ணயிக்கும்.


Click it and Unblock the Notifications








