மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடலானது டெல்ட்டா மற்றும் ஸீட்டா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஹைப்ரிட் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சம் கொண்ட பெட்ரோல் மாடலானது சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என 4 வேரியண்ட்டுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி பலேனோ பிஎஸ்-6 பெட்ரோல் மாடலானது ரூ.5.58 லட்சத்திலிருந்து கிடைக்கும். அதேபோல, மாருதி பலேனோ ஹைப்ரிட் காரின் டெல்ட்டா வேரியண்ட் ரூ.7.25 லட்சம் விலையிலும், ஸீட்டா வேரியண்ட் ரூ.7.86 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மாருதி பலேனோ ஹைப்ரிட் காரின் ஹைப்ரிட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வந்துள்ளது. இந்த காரின் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எஸ்எச்விஎஸ் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கும்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருப்பதால், மாருதி பலேனோ காரின் மாசு உமிழ்வு குறைந்திருப்பதுடன், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும். இதனால், பிஎஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வந்திருக்கும் முதல் மாருதி கார் மாடல் என்ற அஸ்தஸ்தை பெறுகிறது.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் ஹைப்ரிட் அல்லாத பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜை வழங்கும் நிலையில், மைல்டு ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தின் மூலமாக இந்த காரில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரி மூலமாக இயங்கும் மின் மோட்டார் கூடுதல் டார்க் திறனை வழங்கும். அத்துடன், கார் பிரேக் பிடிக்கும்போது ரீஜெனரேட்டிவ் பிரேக் தொழில்நுட்பத்தின் வாயிலாக மின்சார ஆற்றல் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்படும்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோன்று, ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டத்தின் மூலமாகவும் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு உமிழ்வு உறுதி செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், அதற்கு தக்கவாறு தனது கார் மாடல்களை மேம்படுத்தத் துவங்கி இருக்கிறது மாருதி கார் நிறுவனம்.

Article Published On: Monday, April 22, 2019, 12:48 [IST]
English summary
Maruti Baleno Mild Hybrid launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+