விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

மாருதி பலேனோ கார் விற்பனையில் மிக அசத்தலான புதிய சாதனையை படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் சந்தையில் விற்பனையில் நம்பர்-1 மாடலாக மாருதி பலேனோ கார் விளங்குகிறது. டிசைன், வசதிகள், நம்பகமான எஞ்சின் அனைத்திலும் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

இந்த நிலையில், வெறும் 44 மாதங்களில் 6 லட்சம் என்ற இலக்கை தொட்டு சாதனை படைத்துள்ளது மாருதி பலேனோ கார், மேலும், குறுகிய காலத்தில் 6 லட்சம் இலக்கை தொட்ட கார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி பலேனோ கார் டிசைனில் மிக அசத்தலாகவும், தனித்துவமிக்கதாவகவும் வந்தது. ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும், நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்வதும் இந்த காரின் மதிப்பை உயர்த்தின.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

இதனால், விற்பனையில் இந்தியாவின் டாப்-5 கார்களில் ஒன்றாக விளங்குகிறது. அண்மையில் வந்த புதிய மாடலும் இந்த இடத்தை கெட்டியாக தக்க வைத்துக் கொள்ளும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

மாருதி பலேனோ காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஃபாலோ மீ லேம்புகள், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் வசதிகளுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் பெயர் பெற்றிருப்பதை போல, இடவசதியிலும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை அளிக்கிறது.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

மாருதி பலேனோ கார் பல எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. சாதாரண 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

அடுத்து, மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

மாருதி பலேனோ காரின் டீசல் மாடலில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

பலேனோ ஆர்எஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அனைத்து எஞ்சின்களுமே வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றவை என்பதுடன், எரிபொருள் சிக்கனத்திலும் சிறந்ததாக பெயரெடுத்துள்ளன.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

இவற்றை தவிரவும், மாருதியின் சிறப்பான வாடிக்கையாளர் சேவை மாருதி பலேனோ காரின் விற்பனையை பல உச்சங்களை தொட வைத்து வருகிறது. தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் எஞ்சின் தேர்விலும் மாருதி பலேனோ கிடைப்பதும் தனது இடத்தை தக்க வைப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறது.

விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தது மாருதி பலேனோ கார்!

புதிய மாருதி பலேனோ கார் ரூ.5.65 லட்சம் முதல் ரூ.8.98 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களையும் இந்த கார் வழங்குவதால் தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2019, 14:53 [IST]
English summary
Maruti Baleno car has reached 6 lakh sale mark within 44 months since its launch in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+