2019 மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் விலை விபரம் கசிந்தது!
புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் கார்மாருதி இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் மாருதி பலேனோ கார் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பொலிவு கூட்டப்பட்ட பலேனோ கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது அதன் பவர்ஃபுல் வெர்ஷனாக விற்பனை செய்யப்படும் பலேனோ ஆர்எஸ் காரும் மாருதி இணையதளத்தின் மூலமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காரில் சிறிய அளவிலான பல டிசைன் செய்யப்பட்டுள்ளன.

புதிய க்ரில் அமைப்பு, பெரிய அளவிலான ஏர்டேம் பகுதி, புதிய பனி விளக்குகள் அறை அமைப்பு ஆகியவை மாற்றங்களாக தெரிகின்றன. பலேனோ ஆர்எஸ் மாடலில் தேன்கூடு வடிவிலான வலை அமைப்பு இடம்பெற்றுள்ளது.

பழைய மாடலில் பை - ஸினான் புரோஜெக்டர் ஹெட்லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. புதிய மாடலில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, புதிய மாடலில் 16 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற வடிவமைப்பு மாற்றங்கள் குறித்த படங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், டெயில் லைட் க்ளஸ்ட்டரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பது உறுதியான விஷயமாக கருதலாம்.

டாப் வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோ டிம் ரியர் வியூ மிரர், எலெக்ட்ரிக் ஃபோல்டபிள் சைடு மிரர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இதனிடையே, புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் கார் முறைப்படி விற்பனைக்கு வருவதற்கு முன்னரே விலை விபரம் கார்டாக் தளம் மூலமாக கசிந்துள்ளது. பழைய மாடல் ரூ.8.47 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய மாடலுக்கு ரூ.8.76 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.29,000 கூடுதல் விலையில் வருகிறது.

சாதாரண மாருதி பலேனோ கார் மாடலில் 82 பிஎச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

இந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் கார்களை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஃபோக்ஸ்வேகன் போலே ஜிடி, அபார்த் புன்ட்டோ, டாடா டியாகோ ஜேடிபி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








