மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்

மாருதி செலிரியோ மற்றும் ஆலட்டோ கே10 கார்களின் பிஎஸ்-6 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே பிஎஸ்-6 எஞ்சினுடன் கார்களை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் எஸ் பிரெஸ்ஸோ காரை அறிமுகம் செய்த அந்நிறுவனம் அடுத்து இரண்டு பிஎஸ்-6 மாடல்களை சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது.

மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்

மாருதி கார் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய மாடல்களாக விளங்கும் செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களின் பிஎஸ்-6 மாடல்கள்தான் விரைவில் சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த கார்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு ஏற்கனவே பிற கார்களில் வழங்கப்படுகிறது.

மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்

இந்த நிலையில், செலிரியோ, ஆல்ட்டோ கே10 கார்களிலும் இந்த பிஎஸ்-6 எஞ்சின் வர இருக்கிறது. மாருதி செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருக்கிறது.

மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்

இரண்டு கார்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. லிட்டருக்கு 23.95 கிமீ மைலேஜை வழங்கும் என மாருதி தெரிவிக்கிறது. ஆல்ட்டோ கே10 சிஎன்ஜி மாடலானது கிலோ எரிபொருளுக்கு 32.26 கிமீ மைலேஜ் வழங்கும் என்றும் மாருதி கூறுகிறது.

மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்

மாருதி ஆல்ட்டோ கே10 கார் ரூ.3.72 லட்சத்திலிருந்து ரூ.4.51 லட்சம் வரையிலான விலையிலும், செலிரியோ கார் ரூ.4.36 லட்சத்திலிருந்து ரூ.5.53 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும்போது இந்த கார்களின் விலை அதிகரிக்கப்படும்.

மாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்

பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இந்த இரண்டு கார்களும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. எனவே, விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாருதி செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 கார்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2019, 17:12 [IST]
English summary
According to report, Maruti is planning to launch Celerio and Alto K10 with BSVI 1.0-litre petrol engine in India very soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+