கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

புத்தாண்டு பிறந்தது முதல் கார் சந்தையில் சுணக்கமான நிலை காணப்படுகிறது. மேலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேவையில் சரிவு இருக்கும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் கருதுகிறது.

கார் சந்தையில் காணப்படும் மந்த நிலை எதிரொலியாவில், கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்துள்ளது மாருதி கார் நிறுவனம். கூடுதல் விபரஙகளை இந்த செய்தியில் காணலாம்.

கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, 50 சதவீத சந்தை பங்களிப்பை பெற்றிருக்கிறது. நாட்டின் விற்பனையாகும் இரண்டு கார்களில் ஒன்று மாருதி தயாரிப்பு என்ற அளவுக்கு நிலைமை உள்ளது.

கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

இந்த சூழலில், புத்தாண்டு பிறந்தது முதல் கார் சந்தையில் சுணக்கமான நிலை காணப்படுகிறது. மேலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேவையில் சரிவு இருக்கும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் கருதுகிறது.

கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

இதன்படி, கார் உற்பத்தியை கடந்த ஜனவரி முதல் படிப்படியாக குறைத்துவிட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைவிட, நடப்பு ஆண்டு ஜனவரியில் கார் உற்பத்தியை 4 சதவீதம் அந்நிறுவனம் குறைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 8.3 சதவீதம் அளவுக்கு கார் உற்பத்தியை குறைத்துவிட்டது.

கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1,62,524 கார்களையும், சூப்பர் கேரி வர்த்தக வாகனத்தையும் உற்பத்தி செய்திருந்த மாருதி சுஸுகி, கடந்த மாதம் 1,48,959 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இதேபோன்று, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,72,000 வாகனங்களை உற்பத்தி செய்திருந்த அந்நிறுவனம், இந்த மாதம் 1,26,000 லட்சம் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட இந்த மார்ச்சில் மாருதி கார் உற்பத்தி 25 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு மிக குறைந்த அளவு உற்பத்தியாக இது இருக்கும்.

கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் மாருதி சுஸுகி வெளியிடவில்லை. புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மிக கணிசமாக குறைந்துள்ளதையடுத்து, இந்த முடிவை எடுத்துள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

கடந்த மாதத்தில் மொத்த கார் விற்பனை 8.25 சதவீதம் குறைந்தது. இதனால், மாருதி கார் நிறுவனத்தை தொடர்ந்து பிற கார் நிறுவனங்களும் கார் உற்பத்தியை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் கார் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti cuts production amid poor demand.
Story first published: Tuesday, March 19, 2019, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X