விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது மாருதி டிசையர் கார். அதன் விபரங்களையும், வெற்றிக்கான காரணங்களையும் இந்த செய்தியில் பார்க்ககலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி டிசையர் கார் 2011ம் ஆண்டு 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் காம்பேக்ட் செடான் மாடலாக களமிறக்கப்பட்டது. அதுமுதல், வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அடக்கமான வடிவம், அதிக எரிபொருள் சிக்கனம், சரியான விலை என அனைத்திலும் நிறைவை தந்து வருகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

இதனால், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் விற்பனையில் பல புதிய சாதனைகளை மாருதி டிசையர் படைத்து வருகிறது. இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு 11 ஆண்டுகளில் இதுவரை 19 லட்சம் மாருதி டிசையர் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

ஒவ்வொரு தலைமுறை மாறும்போது மாருதி டிசையர் காரின் விற்பனை கூடுதலாகிக் கொண்டே செல்கிறது. இதனால், விற்பனையில் குறுகிய காலத்திலேயே தற்போது புதிய மைல்கற்களை எட்டத் துவங்கி இருக்கிறது. கடந்த 2017ல் மூன்றாம் தலைமுறை மாடல் வந்த பிறகு, விற்பனை எகிடுதகிடாக அதிகரித்தது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

மூன்றாம் தலைமுறை மாடலின் டிசைன், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு தன்னிறவை கொடுத்து வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

மேலும், சுஸுகியின் நம்பகமான பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த காருக்கு வலு சேர்க்கின்றன. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. பெட்ரோல், டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

மாருதி டிசையர் காரின் வெற்றிக்கு மேலும் ஒரு காரணம், இதன் மைலேஜ். இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலும் மிகச் சிறப்பான எரிபொருளை வழங்குவதால், தினசரி பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் வாடிக்கையாளர்களின் பர்ஸுக்கு நண்பனாக விளங்குகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

மாருதி டிசையர் காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு மவுண்ட்டுகள் உள்ளிட்ட பல அடிப்படை பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. இதுவும் இந்த காரை சிறந்த தேர்வாக மாற்றி இருக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் கார் மிகச் சரியான விலையில் கிடைப்பதும் வெற்றிக்கும் காரணம். இந்த கார் ரூ.5.66 லட்சம் முதல் ரூ.9.51 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு, மாருதியின் அதிக அளவிலான சர்வீஸ் சென்டர்கள் மூலமாக மிக நெருக்கமான விற்பனைக்கு பிந்தைய சேவையும் இதன் மார்க்கெட்டை தூக்கிப் பிடிக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Dzire crosses 19 lakh sales milestone in India. Here is given some key reasons for Maruti Dzire success.
Story first published: Monday, June 10, 2019, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X