மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

கடந்த நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாருதி எர்டிகா காருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சொகுசான இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

கடந்த நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாருதி எர்டிகா காருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு, இடவசதி, தொழில்நுட்ப வசதிகள் என அனைத்திலும் சிறப்பான பட்ஜெட்டில் கிடைக்கும் என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

மாருதி எர்டிகா கார் தற்போது 7 சீட்டர் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விரைவில் மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

வர்த்தக விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணிப்பவர்களுக்கு மிகச் சிறந்த சொகுசு வசதிகளுடன் இந்த மாடல் வருகிறது. கேப்டன் இருக்கைகள் முக்கிய அம்சமாக இருக்கும். இந்த மாடல் மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

மேலும், அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட் மாடலாக மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிகிறது. போட்டியாளர்களைவிட விலை குறைவான சொகுசு எம்பிவி ரக மாடலாக இருக்கும் என்பதால் வர்த்தகர்கள், தொழிலதிபர்களின் தனி கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ரெனோ லாட்ஜி மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய போட்டி கார் மாடல்களில் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் கிடைக்கிறது. இந்த நிலையில், மாருதி எர்டிகா காரிலும் இந்த வசதி கொடுக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

புதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. விரைவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடல் வருகிறது!

புதிய மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் டீசல் மாடல் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். வெளியில் கொடுத்து கேப்டன் இருக்கைகளை மாற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 22, 2019, 11:56 [IST]
English summary
Autocar India reports that there is a 6-seater version of the Maruti Ertiga in the works and it will be launched within a few weeks' time. Unlike the regular family-oriented seven-seater version, the new 6-seater Ertiga will focus on being a premium and luxurious choice within an affordable price tag.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+