முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

இந்தியாவின் எம்பிவி மார்க்கெட்டில் மிகச் சரியான விலையில் அதிசிறந்த தேர்வாக மாருதி எர்டிகா கார் இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை இடவசதியிலும், சிறப்பம்சங்களிலும் மேம்பட்டு வந்ததததையடுத்து, வாடிக்கையாளர்களும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதனால், விற்பனை சிறப்பான எண்ணிக்கையில் இருந்து வருகிறது.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களில் சொகுசு இருக்கைகள் வழங்கப்படுவதால், அவை அடிக்கடி நீண்ட தூரம் பிராயணிப்போர் மத்தியில் அதிக முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றன. இதனை மனதில் வைத்து எர்டிகா காரின் 6 சீட்டர் மாடலை மாருதி சுஸுகி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

மாருதி எர்டிகா க்ராஸ் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வரும் இந்த கார் முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது. மேலும், இந்த புதிய மாடல் மாருதி சுஸுகி XL6 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பது காடிவாடி தளம் வெளியிட்ட ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

மாருதி பலேனோ காரில் வழங்கப்படும் விசேஷ நீல வண்ண கலவையில் வர இருக்கும் மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார் ஸ்பை படங்களின் மூலமாக இந்திய கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்புறத்தில் புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் முகப்பு க்ரில் அமைப்பை பிரதிபலிக்கும் விதத்திலான க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக தெரிகின்றன.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

ஹெட்லைட் க்ளஸ்ட்டருடன் இணைந்து கொடுக்கப்பட்ட பகல்நேர விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர்கள் ஆகியவை மாருதி எர்டிகா காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முக அமைப்பை பெற்றிருக்கிறது. பகல்நேர விளக்குகளை இணைப்பது போன்ற இரட்டை க்ரோம் பட்டைகள் க்ரில் அமைப்பில் படுக்கை வாட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஸ்கிட் பிளேட், புதிய பம்பர் அமைப்பு, பனி விளக்குகள் அறை என அனைத்துமே புதிதாக தெரிகிறது. வீல் ஆர்ச்சுகளில் கருப்பு வண்ண பிளாஸ்டிக் கவசங்கள், கருப்பு வண்ண அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் ரெயில்கள் ஆகியவையும் இதனை வேறுபடுத்துகின்றது.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

பின்புறத்தில் டெயில் லைட் க்லஸ்ட்டரில் மாற்றம் தெரியவில்லை. ஆனால், ஸ்கிட் பிளேட் முக்கிய அம்சமாக இருப்பதுடன், XL6 பேட்ஜ் இடம்பெற்றிருப்பது முக்கிய விஷயமாக கருத முடியும். இந்த கார் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வர இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

இந்த காரில் உட்புறத்தில் முக்கிய மாற்றமாக, நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட இருக்கின்றன. அடிக்கடி நீண்ட தூரம் பயணிப்போருக்கும், சொகுசாக பயணம் செய்ய விரும்புவோருக்கும் இது சிறந்த தேர்வாக அமையும்.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்பபடுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்தத மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

இந்த காரில் இடம்பெற இருக்கும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் தேர்வு இருக்காது என்பது தெரிய வருகிறது.

முதல்முறையாக தரிசனம் கொடுத்த மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 கார்!

அடுத்த மாதம் 21ந் தேதி புதிய மாருதி எக்ஸ்எல்6 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாருதி எர்டிகா காரின் டார் வேரியண்ட்டைவிட விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles

English summary
Maruti Suzuki Ertiga based 6 seater model spied for first time in India. It will be christened as XL6 and expected to be launched on August 21, 2019.
Story first published: Tuesday, July 23, 2019, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X