மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலில் இருந்து எல்டிஐ பேஸ் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

இந்தியாவில் விலை குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த எம்பிவி கார் மாருதி எர்டிகா. கடந்த ஆண்டு நவம்பரில் புதிய தலைமுறை மாடலாக விற்பனைக்கு வந்தது. பெட்ரோல், டீசல் மாடலில் கிடைத்தாலும், மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

இந்த சூழலில், மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட்டை விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது மாருதி கார் நிறுவனம். இதுதொடர்பாக, டீலருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், வரும் ஏப்ரல் 1 முதல் மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலில் இருந்து எல்டிஐ வேரியண்ட் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

அதேபோன்று, மாருதி ஜிப்ஸி எஸ்யூவியின் உற்பத்தியும் நிறுத்தப்படுகிறது. எனவே, மாருதி ஜிப்ஸி மற்றும் மாருதி எர்டிகா எல்டிஐ வேரியண்ட்டிற்கு முன்பதிவு ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலில் இனி விடிஐ வேரியண்ட்தான் விலை குறைவான பேஸ் வேரியண்ட் தேர்வாக இருக்கும். இந்த வேரியண்ட் தற்போது ரூ.9.56 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இதுவரை விற்பனையில் இருந்த எல்டிஐ வேரியண்ட்டைவிட ரூ.72,000 கூடுதல் விலையில் விடிஐ விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

இதனிடையே, மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், மிக விரைவில் மாருதி நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாருதி எர்டிகா காரில் வழங்கப்பட இருக்கிறது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

இதன் காரணமாகவே, எல்டிஐ வேரியண்ட் விற்பனையில் இருந்து விலக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. மறுபுறத்தில் புதிய தலைமுறை மாருதி எர்டிகா காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது காத்திருப்பு காலம் அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை நீடிக்கிறது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

இதன் காரணமாக உற்பத்தியில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் விதமாக புதிய தலைமுறை மாருதி எர்டிகா காரில் எல்டிஐ வேரியண்ட்டை மாருதி நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பிற வேரியண்ட்டுகளின் உற்பத்தியை அதிகரித்து விரைவாக டெலிவிரி கொடுக்க முடியும் என்று மாருதி நம்புகிறது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

மாருதி எர்டிகா எல்டிஐ வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுடண்ட்டுகள், ஸ்பீடு சென்சிங் டோர் லாக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள்,புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், மேனுவல் ஏசி, 15 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கிடைத்து வந்தது. இந்த வேரியண்ட்தான் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

மாருதி எர்டிகா காரின் விடிஐ வேரியண்ட்டில் மேற்கண்ட வசதிகளுடன் கூடுதலாக யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் மற்றும் புளூடூத் வசதியுடன் கூடிய 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், இரண்டாவது வரிசைக்கான ஏசி வென்ட்டுகள், சென்டர் ஆர்ம் ரெஸ்ட் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், 12 வோல்ட் சார்ஜிங் போர்ட்டுகள், கீ லெஸ் என்ட்ரி வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாருதி எர்டிகா டீசல் மாடலில் இனி பேஸ் வேரியண்ட் இல்லை!

மாருதி எர்டிகா கார் மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் ரெனோ லாட்ஜி உள்ளிட்ட எம்பிவி கார் மாடல்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது. எனினும், போட்டியாளர்களைவிட கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பு வாய்ந்த, பராமரிப்பு செலவு குறைவான மாடலாக இருப்பது இதன் பலம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2019, 12:57 [IST]
English summary
Maruti Suzuki, the nation's largest carmaker is discontinuing a few of its models including the iconic Gypsy. A forum post on team-bhp.com has revealed that Maruti Suzuki will also stop taking orders and end production of the Ertiga MPV's base diesel variant. According to the image posted on the forum page, the Maruti Ertiga Ldi will be discontinued from April 1, 2019, along with the Gypsy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+