5லட்சத்திற்கும் அதிகமான விற்பனை.. மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி ரக கார் இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான விற்பனையை அள்ளிக்குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரின்மீது இந்தியர்கள் இத்தகைய வரவேற்பை அளிப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

மாருதி சுஸூகி நிறுவனத்தின் அதிக பிரபலமான கார்களில் ஒன்றாக எர்டிகா எம்பிவி ரக கார் இருக்கின்றது. இந்த கார் அந்நிறுவனத்தின் பிரபலமான காராக இருப்பதுடன் அதிகம் விற்பனையாகும் மாடல்களிலும் ஒன்றாகவும் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான விற்பனையைப் பெற்றிருக்கின்றது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆண்டு தொடங்கியது முதல் கடும் விற்பனைச் சரிவைச் சந்தித்தது. ஆனால், இந்த காலக்கட்டத்திலும் புதிய எர்டிகா கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெற்று மாருதி நிறுவனத்திற்கு கை கொடுத்து உதவியது.

மாருதி நிறுவனம் இந்த எர்டிகா எம்பிவி ரக காரை கடந்த 2012 ஆண்டே அறிமுகம் செய்தது. தொடர்ந்து, இதன் இரண்டாம் தலைமுறை மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

ஒட்டுமொத்தமாக 8 வருடங்களாக இந்த கார் இந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளது. தொடர்ந்து, இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் கிடைத்த அதீத வரவேற்பின் காரணமாக எர்டிகா எம்பிவி ரகத்திலான எக்ஸ்எல்-6 என்ற மற்றுமொரு மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

ஆறு இருக்கைகளை மட்டுமே கொண்ட இந்த காரில் எர்டிகா மாடலில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். இதுமட்டுமின்றி கூடுதல் லக்சூரி மற்றும் தொழில்நுட்பங்களும் எக்ஸ்எல்-6 மாடலில் காணப்படுகின்றது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

மாருதி நிறுவனம் இந்த புத்தம் புதிய எக்ஸ்எல்-6 மாடலை நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனைச் செய்து வருகின்றது. இத்துடன், சிறப்பு விற்பனையாக அரேனா டீலர்கள் மூலமாகவும் அந்நிறுவனம் எர்டிகாவை விற்பனைச் செய்து வருகின்றது.

எர்டிகாவின் இரண்டாம் தலைமுறை அதன் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில் சற்றே மாறுபட்ட தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

அந்தவகையில், முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைப் பெற்ற அந்த காரில் அதிக இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், புதிய பெட்ரோல் எஞ்ஜின் நிறுவப்பட்டது. இதுபோன்று, அனைத்திலும் இந்திய பட்ஜெட் வாகன பிரியர்களைக் கவரும் வகையில் புதிய எர்டிகா காணப்பட்டதும் தற்போதைய அதீத வரவேற்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

முன்னதாக, எர்டிகாவின் இரண்டாம் தலைமுறை கார் விற்பனைக்கு அறிமுகம் செய்து ஓராண்டு கடந்த நிலையில், புதிய தலைமுறை எர்டிகா மட்டும் ஒரு லட்சம் விற்பனையாகியதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்த நாளிலிருந்து தற்போது வரை 5 லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளன.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

மலிவான விலை:

இதற்கு அந்த காரில் இடம்பெற்றிருக்கும் அதிக சிறப்பு அம்சங்களே காரணமாக இருக்கின்றது. முக்கியமாக, எர்டிகா மற்ற எம்பிவி ரக கார்களைக் காட்டிலும் மலிவான விலையில் இருப்பதே சிறந்த காரணம்.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

அந்தவகையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா மராசோ மற்றும் டொயோட்டா இன்னவோ கிரிஸ்டா உள்ளிட்ட கார்களைக் காட்டிலும் குறைவான விலையில் போட்டி கொடுத்து வருகின்றது. ஆகையால், எர்டிகா எம்பிவி ரக காரை வாங்க விரும்புவோர்களின் தேர்வில் முதல் இடத்தில் இருக்கின்றது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

நம்பகத்தன்மை

எர்டிகா மலிவு விலைக் கொண்டதாக இருப்பதுடன் எரிபொருள் சிக்கனத்திலும் அதிக திறன் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அதேசமயம், இந்த காரை பராமரிப்பதற்கும் குறைந்த செலவீணமே தேவைப்படுகின்றது. இது, ஒவ்வொரு மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் பொருந்தக்கூடியது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

அடக்கமானது

மற்ற எம்பிவி ரக கார்களுடனம் ஒப்பிடுகையில் எர்டிகா எம்பிவி கார் மிகவும் அடக்கமான ஓர் மாடலாக காணப்படுகின்றது. ஆகையால், இது தினந்தோறும் பயணிப்பவர்களுக்கும் எளிதில் பயனளிக்கின்றது. மேலும், சாலையில் செல்லும்போது அல்லது வீட்டில் நிறுத்தவற்கு இந்த காருக்கு சிறிய அளவிலான இடமே போதுமானதாக உள்ளது.

5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை... மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா..?

உறுதித் தன்மை மற்றும் மறு விற்பனை மதிப்பு

இந்த காரின் கட்டுமானம் அதிக உறுதித் தன்மைக் கொண்டதாக காணப்படுகின்றது. அதேசமயம், இதன் எஞ்ஜினும் கடினமாக உழைக்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், இந்த காரை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைச் செய்தாலும் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் நல்ல மதிப்பிலேயே விற்பனையாகும்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் மாருதி எர்டிகாவிற்கு அளவுகடந்த வரவேற்பினை அளித்து வருகின்றனர்.

Most Read Articles
English summary
Maruti Ertiga Sales Crosses 5 Lakhs In India. Read In Tamil.
Story first published: Friday, December 20, 2019, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X