விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

விற்பனையில் புதிய மாருதி எர்டிகா கார் புதிய சாதனை படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

சரியான பட்ஜெட்டில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் எம்பிவி ரக கார் என்ற பெருமையை மாருதி எர்டிகா தக்க வைத்து வருகிறது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

முற்றிலும் புதிய வடிவமைப்புக்கு மாறியதுடன், புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதிக இடவசதி போன்றவற்றுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், பட்ஜெட்டையும் கச்சிதமாக பூர்த்தி செய்தது. இதனால், முதல் தலைமுறை மாடலைவிட அதிக வரவேற்பை பெற்றது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

இந்த நிலையில், புதிய மாருதி எர்டிகா கார் விற்பனையில் அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகும் நிலையில், விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாக மாருதி நிறுவனம் விற்பனையில் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்த போதிலும் புதிய மாருதி எர்டிகா கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை வழங்கி மாருதிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

மாதத்திற்கு சராசரியாக 8,000 கார்கள் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் மாருதி எர்டிகா காரின் அடிப்படையிலான எக்ஸ்எல்-6 காரும் கூடுதல் விற்பனையை வழங்குவதால், தற்போது மாதத்திற்கு 10,000 கார்களுக்கு மேல் விற்பனையாகிறது. ஆனால், எக்ஸ்எல்-6 மாடலானது பிரிமீயம் ரகத்தில், மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

மாருதி சுஸுகியின் புதிய ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 15 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ஏசி சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

இந்த காரில் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். பார்க்கிங் சென்சார்கள், பார்க்கிங் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

புதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி எர்டிகா கார்!

புதிய மாருதி எர்டிகா கார் ரூ.7.55 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. மாருதி எக்ஸ்எல்-6 கார் ரூ.9.80 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற 7 சீட்டர் எம்பிவி கார்களைவிட மிக குறைவான பட்ஜெட்டில் கிடைப்பது இதன் முக்கிய அம்சம்.

Via - Rushlane

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2019, 10:08 [IST]
English summary
Maruti Suzuki Ertiga has crossed the one lakh domestic sales milestone in one year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+