மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

மாருதி சுஸுகி அதன் பிரபல எர்டிகா மாடலிலான டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷனை விற்பனைக்கு அறிமுகம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரபல டூர் எம் மாடலின் டீசல் வேரியண்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் சுஸுகி நிறுவனத்தின் மற்றுமொரு பிரபல மாடலான எர்டிகா எம்பிவி ரக காரின் கூடுதல் வெர்ஷனாக உருவாக்கப்பட்ட மாடலாகும்.

டூர் எம் மாடல், எர்டிகாவின் தோற்றத்தைப் பெற்று உருவாகிய மூன்றாம் மாடலாகும்.

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

முன்னதாக, டூர் எம் வெர்ஷனில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, டீசல் ஆப்ஷன் இல்லாதது ஓர் சிறு குறையாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம், தற்போது அதன் டீசல் வேரியண்ட்டையும் இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

டூர் எம் மாடல்கள், பிரத்யேகமாக டாக்ஸி மற்றும் வாடகை உள்ளிட்ட வணிகம் சார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப வகையில், அதிக அளவு இடவசதி, நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை அது உள்ளடக்கியுள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

புதிய மாருதி சுஸுகி டூர் எம் டீசல் வேரியண்ட், எர்டிகாவின் ஸ்டாண்டர்டு மாடல் விடிஐ (VDi) வேரியண்டை ஒத்ததாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அதைக்காட்டிலும் ரூ. 5 ஆயிரம் வரை விலை குறைவைக் கொண்டுள்ளது.

அந்தவகையில், இந்திய மதிப்பில் ரூ. 9.81 லட்சம் என்ற விலையில் அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, தலைநகர் டெல்லியில் விற்பனைச் செய்யப்படக்கூடிய காரின் எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும்.

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

டூர் எம் டீசல் மாடல் ஸ்டாண்டர்டு வேரியண்டின் அனைத்து சிறப்பம்சங்களையும் அணிந்தவாறு களமிறங்கியுள்ளது. அந்தவகையில், புரஜெக்டர் ஹெட்லேம்ப், டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி மின் விளக்குகள், காரின் நிறத்திற்கேற்ற கதவுகளின் கை பிடிகளுக்கான வண்ணம் மற்றும் ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

தொடர்ந்து, அலாய் வீல்கள் மற்றும் குரோம் பூச்சுக்கொண்ட முன்பக்க கிரில் உள்ளிட்டவையும் ஒரே மாதிரியானதாக உள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

மேலும், மாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்டில் பவர் விண்டோ, சாவியில்லா நுழைவு, தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய ஸ்டியரிங் வீல், பின் பக்கத்தில் அமர்பவர்களுக்கான ஏசி வெண்ட் மற்றும் எலக்ட்ரிக்மூலம் கட்டுபடுத்தக்கூடிய ஓஆர்விஎம்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி!

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

இத்துடன், பாதுகாப்பு வசதியாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, பிரேக் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமிரா, ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ட்யூவர் ஏர்பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்கள் மாருதி சுஸுகி டூர் எம் வேரியண்டில் இடம் பெற்றிருக்கின்றன.

MOST READ: வெறும் 999 ரூபாயில் கார்களுக்கான முழு பரிசோதனை திட்டம்... சென்னையில் கோ-பம்பர் நிறுவனம் அறிமுகம்!

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

மாருதி சுஸுகி டூர் எம் மாடலின் இந்த புதிய தேர்வு 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினில் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 1498சிசி திறனை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த எஞ்ஜின் சிக்ஸ் ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே தற்போது கிடைக்கின்றது. இது லிட்டருக்கு 24.20 கிமீ மைலேஜ் வழங்கும் கூறப்படுகின்றது.

MOST READ: பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

மாருதி சுஸுகி எர்டிகா டூர் எம் மாடலில் டீசல் ஆப்ஷன் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

மேலும், புதிய மாருதி சுஸுகி எர்டிகா எம் டீசல் மாடல் புதிய வண்ணத் தேர்வில் கிடைக்கின்றது. அந்தவகையில், பியர்ல் மிட்நைட் பிளாக், பியர்ல் ஆர்க்டிக் வெள்ளை மற்றும் மெட்டாலிக் சில்கி சில்வர் ஆகிய நிறங்களில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Maruti Ertiga Tour M India Launch Price Specs Features Details. Read In Tamil.
Story first published: Monday, October 14, 2019, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X