வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

பேட்டரியில் இயங்கும் வேகன் ஆர் காரின் விலை குறித்து மாருதி சூசகமாக தெரிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களை அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. முதலாவது மாடலாக வேகன் ஆர் காரின் மின்சார மாடலை அந்நிறுவனம் விற்பனைக்கு களமிறக்க உள்ளது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

இந்த நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில்," அரசாங்காம் மின்சார மாடல்களை அறிமுகப்படுத்துவதில் ஆட்டோமொபைல் துறை கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

ஆனால், நடைமுறையில் மின்சார கார்களை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. குறிப்பாக, மின்சார கார்களின் விலை என்பது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு இணையாக மின்சார கார்களின் விலை நிர்ணயத்திலும் சவால்கள் உள்ளன.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

சிறிய ரக மின்சார கார்களின் விலையானது பட்ஜெட் வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் திறனை தாண்டி இருக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. ரூ.5 லட்சம் விலையுடைய பெட்ரோல் காரை மின்சார மாடலாக விற்பனை செ்யயும்போது ரூ.9 லட்சமாக இருக்கும். நீங்கள் வாங்குவீர்களா? என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

மேலும், பெரும்பாலான கார் உரிமையாளர்கள் வீட்டிற்குள் பார்க்கிங் செய்வதில்லை. வெளியில் அல்லது வீட்டைவிட்டு சற்று தூரத்தில்தான் பார்க்கிங் செய்கின்றனர். அவர்கள் எவ்வாறு சார்ஜ் செய்ய முடியும். முதலில் சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதே அடிப்படையாக இருக்கிறது," என்று வினவியுள்ளார்.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

எதிர்காலத்தில் மின்சார கார் சிறந்ததா அல்லது ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் சிறந்ததாக இருக்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஒரு சீரிய ஆய்வு செய்து, அதன் சாதக, பாதகங்களை அறிந்து கொள்வது அவசியம். எலெக்ட்ரிக் கார்தான் எதிர்காலம் என்பதில் கண்ணை மூடிக்கொண்டு இறங்க முடியாது. அறிவியல்பூர்வமான ஆய்வு தேவை," என்று பர்கவா கூறி இருக்கிறார்.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

இதனிடையே, டொயோட்டா கார் நிறுவனத்துடன் இணைந்து மின்சார கார்களுக்கான லித்தியம் அயான் பேட்டரி ஆலையை குஜராத்தில் அமைத்து வருகிறது சுஸுகி நிறுவனம். இந்த சூழலில், ஆர்.சி.பர்கவா இவ்வாறு கூறி இருக்கிறார்.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விலை குறித்து மாருதி சூசகத் தகவல்!

இதனிடையே, தற்போதுள்ள விதிமுறைகள், உற்பத்தி செலவீனத்தின்படி, சிறிய ரக மின்சார காரின் விலை ரூ.12 லட்சம் வரை இருக்கும் என்று மாருதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவா கூறி இருக்கிறார். இதன்மூலமாக, மாருதியின் முதல் மாடலாக கருதப்படும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் ரூ.12 லட்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Source: TOI

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2019, 16:53 [IST]
English summary
Maruti Suzuki says a small Rs. 5 lakhs petrol car could cost up to Rs. 12 lakhs when it will get electrified version.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+