கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதுப்பொலிவுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி இக்னிஸ் காரின் தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லை. டாப் வேரியண்ட்டுகளில் ரூஃப் ரெயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி இக்னிஸ் கார் சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வாங்கலாம்.

கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி இக்னிஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மாருதி இக்னிஸ் கார் நெக்ஸா புளூ, கிளிஸ்டனிங் கிரே, சில்க்கி சில்வர், டின்செல் புளூ, அப்டவுன் ரெட் மற்றும் பியர்ல் ஆல்டிக் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். தவிரவும், டின்செல் புளூ - மிட்நைட் பிளாக், டின்செல் புளூ - பியர்ல் ஆர்டிக் ஒயிட் மற்றும் அப்டவுன் ரெட் - மிட்நைட் பிளாக் ஆகிய மூன்றுவிதமான இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும்.

கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

வரும் அக்டோபரில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு தக்கவாறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ரியர் பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.4.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

கூடுதல் அம்சங்களுடன் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகளுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய மாருதி இக்னிஸ் கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை தரும் என்று மாருதி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 27, 2019, 14:47 [IST]
English summary
Maruti Suzuki has launched their 2019 Ignis facelift in India. The new Maruti Ignis facelift (2019) comes with a starting price of Rs 4.79 lakh. The top-spec 'Alpha' variant of the Maruti Ignis facelift comes priced at Rs 7.19 lakh. All prices are ex-showroom (Delhi). The new Maruti Ignis facelift comes with a number of new additional features and safety equipment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+