நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தனது பிரபலமான மாடல் கார்களான விட்டாரா பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், டிசைர், ஆல்டோ, ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் எகோ(5/7 இருக்கை) போன்றவற்றிற்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை சலுகைகளை அறிவித்துள்ளது, மாருதி சுசுகி நிறுவனம்.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா இந்த பண்டிகை காலத்தில் கார்களை அதிகளவில் விற்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதத்திலேயே பல சலுகைகளை அறிவித்திருந்த இந்நிறுவனம் தற்போது நவராத்திரி பண்டிக்கையையொட்டி மேலும் பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

இதற்கு காரணம், மாருதி நிறுவனத்தின் மாடல்கள் தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக கடந்த செப்டம்பர் மாதத்திலும் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்ததே ஆகும். கடந்த மாதத்தில் இந்நிறுவனத்தின் 1,22,640 யூனிட்கள் விற்பனையான போதிலும் 24.4 சதவீத வீழ்ச்சியை மாருதி சுசுகி அடைந்துள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

இதனாலேயே தனது பிரபலமான மாடல் கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ள இந்நிறுவனம், இந்த சலுகைகள் அக்டோபர் 10ஆம் தேதி வரை தான் கிடைக்கும் எனவும் கூறியுள்ளது. அதுகுறித்த முழுமையான தகவல்களை இனி பார்ப்போம்.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா (டீசல்)

டீசல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனையாகி வரும் விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு வாடிக்கையாளர்களின் சலுகையாக ரூ.45,000மும், எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடியாக ரூ.20,000மும், கார்ப்பரேட் சலுகையாக ரூ.10,000மும் என ரூ.96,100 வரைக்கும் சலுகைகளை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனுடன் இலவச ஐந்து வருட உத்தரவாதத்தையும் அறிவித்துள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (பெட்ரோல்)

இந்த விழா காலத்தில் இந்த மாடல் காரை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரைக்கும் சேமிக்க முடியும். இதில், வாடிக்கையாளர்கள் சலுகை ரூ.25,000, எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி ரூ.20,000 மற்றும் ரூ.5,000-திற்கான கார்ப்பரேட் சலுகையும் அடங்கும்.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (டீசல்)

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டின் டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.77,600 வரை சலுகைகளை மாருதி சுசுகி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் சலுகை ரூ.30,000, எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி ரூ.20,000 மற்றும் கார்ப்பிரேட் சலுகை ரூ.10,000 ஆகியவை இந்த ரூ.77,600 தொகையில் சேரும். இந்த மாடலுக்கு இலவச ஐந்து வருட உத்தரவாதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி டிசைர் (பெட்ரோல்)

இந்த மாடலுக்கு ரூ.55,000 வரை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ள இந்நிறுவனம், அதில், வாடிக்கையாளர் சலுகை, எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி மற்றும் கார்ப்பிரேட் சலுகைகளை முறையே ரூ.30,000, ரூ.20,000 மற்றும் ரூ.10,000 என குறிப்பிட்டுள்ளது. இந்த மாடல் காருக்கும் இலவச ஐந்து வருட உத்தரவாதம் உள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி டிசைர் (டீசல்)

டிசைரின் டீசல் வேரியண்ட் காரை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களால் ரூ.83,900 வரை சேமிக்க இயலும். இந்த மொத்த மதிப்பில் வாடிக்கையாளர்கள் சலுகை ரூ.35,000, எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி ரூ.20,000 மற்றும் கார்ப்பிரேட் சலுகை ரூ.10,000 அடங்கும். இதனுடன் இந்த காருக்கு இலவச ஐந்து வருட உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி ஆல்டோ (பெட்ரோல்)

மாருதி சுசுகி நிறுவனத்தால் அதிகளவில் விற்கப்பட்ட ஆல்டோ மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு சலுகைகள் ரூ.60,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.40,000ற்கான வாடிக்கையாளர்கள் சலுகையும், ரூ.15,000ற்கான எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடியும், 5,000 ரூபாய்க்கான கார்ப்பிரேட் சலுகையும் சேரும்.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி ஆல்டோ கே10 (பெட்ரோல்)

ரூ.35,000க்கு வாடிக்கையாளர்கள் சலுகை, ரூ.15,000க்கு எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி, ரூபாய் 5 ஆயிரத்திற்கு கார்ப்பிரேட் சலுகைகள் என ரூ.55,000 வரை சலுகைகள் ஆல்டோ கே10ன் பெட்ரோல் மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி செலிரியோ (பெட்ரோல்)

மாருதி சுசுகி செலிரியோவின் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.60,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.35,000ற்கான வாடிக்கையாளர்கள் சலுகை, ரூ.20,000 மதிப்பு கொண்ட எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி மற்றும் ரூ.5,000ற்கான கார்ப்பிரேட் சலுகைகள் இதில் அடங்கும்.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மாருதி சுசுகி எகோ (5 மற்றும் 7 இருக்கை)

எகோ மாடலின் 7 இருக்கை வேரியண்ட்டிற்கு வாடிக்கையாளர்கள் சலுகை ரூ.25,000, எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி ரூ.20,000 மற்றும் கார்ப்பிரேட் சலுகை ரூ.5,000 என மொத்தம் ரூ.50,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

இந்த மாடலிலேயே 5 இருக்கை வேரியண்ட்டிற்கு ரூ.40,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் சலுகை ரூ.15,000, எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி ரூ.20,000 மற்றும் கார்ப்பிரேட் சலுகை ரூ.5,000 ஆகியவை அடங்கும்.

நவராத்திரி ஸ்பெஷல்... டாப் கார் மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மாருதி சுசுகி!

மேற்கூறப்பட்ட மாருதி சுசுகியின் அனைத்து மாடல்களின் சலுகைகளும் நகரத்திற்கு நகரம் மற்றும் வேரியண்ட்டிற்கு வேரியண்ட் மாறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2019, 13:50 [IST]
English summary
Maruti suzuki's Navaratri Special offers availed by the costomers. On Maruti's vitara Brezza, Swift, dzire, alto, alto K10, celerio and maruti suzuki Eeco(5/7 seater).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+