வெனியூ எஃபெக்ட்... மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மீது ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட்!
ஹூண்டாய் வெனியூ காரின் வருகையால், எக்கச்சக்கமான சேமிப்புச் சலுகைகளை பிரெஸ்ஸாவுக்கு வாரி வழங்குகிறது மாருதி கார் நிறுவனம். அதன் விபரங்களை இப்போது காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்தான் நம்பர்-1 மாடலாக இருந்து வந்தது. ஹூண்டாய் வெனியூ வருகைக்கு பின் நிலைமை தலைகீழாக மாறி இருப்பதுடன், விட்டாரா பிரெஸ்ஸா விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

இந்த நிலையில், விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை தூக்கி நிறுத்தும் விதமாக பல்வேறு சிறப்புச் சலுகைகளை மாருதி கார் நிறுவனம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரூ.1.01 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் பேஸ் வேரியண்ட் ரூ.7.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரூ.1.01 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருப்பதால், ரூ.6.91 லட்சம் என்ற விலையில் இப்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு கன்ஸ்யூமர் ஆஃபர் என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து பிரெஸ்ஸாவை வாங்கினால் ரூ.20,000 கூடுதல் மதிப்பும் சேர்க்கப்படுகிறது. ரூ.10,000 கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் ரூ.1,01,200 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

ரூ.50,000 மதிப்புடைய கன்ஸ்யூமர் ஆஃபரில் 5 ஆணஅடுகளுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் கால வாரண்டி தேவையில்லை என்று கூறினால் ரூ.19,000 நேரடியாக விலையில் தள்ளுபடி செய்து வாங்க முடியும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் பயன்படுத்தப்படும் இந்த 1.3 லிட்டர் டீசல் மாடல் விரைவில் விடைபெற இருக்கிறது. விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








