7 சீட்டர் எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்த மாருதி திட்டம்... புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது!

தனது சந்தைப் பங்களிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது மாருதி கார் நிறுவனம். அதன் ஒரு முயற்சியாக, எஸ்யூவி மார்க்கெட்டில் வலுப்பெறும் விதத்தில், புதிய 7 சீட்டர் மாடலை களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி இந்த ரகத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த மார்க்கெட்டை கார் நிறுவனங்கள் குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல், க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் என்று தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டில் சிறப்பான வர்த்தகத்தை பிடித்துவிட்ட மாருதி நிறுவனம் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலை இந்த செக்மென்ட்டில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

ஏற்கனவே க்ராண்ட் விட்டாரா என்ற பெயரிலான மாடலை வைத்திருந்தது. ஆனால், அது சரியாக போனியாகவில்லை. எனினும், அதே விட்டாரா பெயரில் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்துவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

இந்த கார் மாருதி சுஸுகியின் ஹார்ட்டெக் என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் சில அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும். இந்த கார் மாருதி எர்டிகா 7 சீட்டர் மாடலைவிட விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும்.

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல் மாடலில் முழுமையான ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

MOST READ:டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும். அத்துடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வை வழங்கும் எஸ்யூவி வகை மாடலாக முன்னிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

MOST READ: டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

இந்த காரில் 7 பேர் செல்வதற்கான மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் போதிய இடவசதியை அளிக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தனி ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட முக்கிய வசதிகளையும் இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

MOST READ:மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

புதிய 7 சீட்டர் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!

மாருதியின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி போன்றே, இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலும் சிறப்பான வர்த்தகத்தை மாருதி சுஸுகிக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Source: ET Auto

Most Read Articles

English summary
According to a news report, Maruti is planning to launch new 7 seater SUV in Indian market by 2021.
Story first published: Saturday, December 14, 2019, 15:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X