டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

மாருதியின் அடுத்த தயாரிப்பான எஸ்-பிரெஸ்ஸோ காரின் டீசர்கள் கடந்த சில நாட்களே தொடர்ந்து வெளிவந்தவாறு உள்ளன. இந்நிலையில் எஸ்-பிரெஸ்ஸோ காரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

விரைவில் அறிமுகமாகவிருக்கும் இந்த எஸ்-பிரெஸ்ஸோ காரை இந்தியாவில் பலமுறை டெஸ்ட் செய்து பார்த்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் வெளிவந்த இந்த காரின் டீசர் வாடிக்கையாளர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

எஸ்-பிரெஸ்ஸோ காரின் அறிமுகம் வருகிற செப்டம்பர்-30ஆம் தேதி என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இக்காருக்கான முன்பதிவுகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என தெரிகிறது. அதற்கு முன்னதாகவே இக்காரின் இந்திய டீலர்ஷிப்களுக்கு வருகை தரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகியும் உள்ளன.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

தற்போது மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களே வெளியாகிவிட்டன. இதில் SUV ஹேட்ச்பேக் பெரியதாக பார்ப்பதற்கு மைக்ரோ-SUVவின் தோற்றத்தை அளிக்கிறது. இதன் டிசைன் கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான‘பியுட்சர்-எஸ்'கான்செப்ட் வடிவில் உள்ளது. ஹேட்ச்பேக் சதுர வடிவில் அழகான டிசைனில் உள்ளது.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

இந்த எஸ்-பிரெஸ்ஸோவில் ஸ்டேரிங், சீட், கதவின் உள்பக்கம் என உட்புற பாகங்கள் அனைத்தும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டு மிக பெரிய தொடுதிரையுடன் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேகோமீட்டர் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

ஏசி, காரின் உட்புறம் முழுவதும் ஒரே அளவில் பரவுவதற்காக காரின் உட்புற மையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சிறப்பம்சங்களாக ஸ்டீயரிங் வீலில் உள்ள கட்டுப்பாட்டு வசதி மூலமாக திசைகளை மாற்றுவது, மேனுவலாக HVAC, ORVM-களை அட்ஜெஸ்ட் செய்வது, 12 வோல்ட் சார்ஜ் சாக்கெட், USB மற்றும் AUX பயன்படுத்துவது போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

விபத்திலிருந்து பாதுக்காக்க முன்பக்கமாக ஏர்பேக்கும் எஸ்-பிரெஸ்ஸோ காரில் கொடுக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டு அமைப்பு, பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் மேலும் சில சிறப்பு பாகங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

இந்த எஸ்-பிரெஸ்ஸோ காரில் BS-VIவிற்கு இணக்கமான 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. மாசு உமிழ்வு அமைப்பும் இக்காரில் உருவாக்கப்பட்டுள்ளது.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

இக்காரின் என்ஜின் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி ஆற்றலையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

டீசரை தொடர்ந்து மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

ரெனால்ட் க்விட் காருக்கு போட்டியாக எஸ்-பிரெஸ்ஸோ வரவுள்ளதால், சுசுகி நிறுவனம் விரைவில் ரெனால்ட் க்விட் காரின் டீசரை வெளியிடலாம். மாருதி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விலை இந்திய மார்கெட்டில் 3 லட்சத்தில் விற்பனையாகலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2019, 17:16 [IST]
English summary
Maruti Suzuki S-Presso Revealed: Official Images Unveil Interiors, Exteriors & Other Details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+