மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

பட்ஜெட் வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டியுள்ள புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் வீடியோவில் காரின் டிசைனை ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய கார் மாடல் எஸ் பிரெஸ்ஸோ. மினி எஸ்யூவி போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த கார் மிக குறைவான விலையில் வர இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

மாருதியின் இந்த புதிய பட்ஜெட் கார் வரும் 30ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய காரை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து டீசர்களை வெளியிட்டு வருகிறது மாருதி.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

தற்போது வெளியாகி இருக்கும் புதிய டீசரில் காரின் டிசைனை ஓரளவு அனுமானித்து விட முடிகிறது. சதுர வடிவிலான ஹெட்லைட், மஹிந்திரா கார்களின் முன்புற க்ரில் அமைப்பை நினைவூட்டும் முகப்பு அமைப்பு, எஸ்யூவி கார்களுக்கு உரிய உயர்த்தப்பட்ட வடிவமைப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது.

பம்பர் அமைப்புகள் கருப்பு வண்ண பிளாஸ்டிக் பாகங்களுடன் எஸ்யூவி ஸ்டைலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இது வேகன் ஆர் உள்ளிட்ட மாடல்களை போன்றே, டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த காரின் உட்புறத்தில் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் வர இருக்கிறது.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

இந்த காரின் முக்கிய ஹைலைட்டில் ஒன்றாக, மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது. மேலும், உயர்வகை வேரியண்ட்டுகளில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், பட்ஜெட் கார் என்பதால், ஸ்டீல் வீல்கள்தான் கொடுக்கப்பட்டு இருப்பதாக டீசர் மூலமாக தெரிகிறது.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட இருப்பதால், இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பாக்கெட்டில் சாவி இருந்தாலே எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியையும், கதவுகளை திறப்பதற்கான கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியீடு!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.3.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட், டாடா டியாகோ உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். தீபாவளியின்போது பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போர், இந்த காரையும் தேர்வில் சேர்த்துக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2019, 10:09 [IST]
English summary
Maruti Suzuki India Limited (MSIL), is all set to launch it's S-Presso hatchback in the Indian market on the 30th September. The upcoming Maruti S-Presso hatchback is showcased yet again in a brand-new teaser video.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+