ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

பண்டிகை கால ரிலீசாக வர இருக்கும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் பல முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

ரெனோ க்விட் காருக்கு எதிராக புதிய மைக்ரோ எஸ்யூவி ரக மாடலை மாருதி கார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரிலான இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி ரக கார் வரும் 30ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

வழக்கம்போல் மாருதியிடமிருந்து வரும் புத்தம் புதிய கார் மாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவலில் இந்த காரின் முக்கியத் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

அதன்படி, மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ஆல்ட்டோ மற்றும் வேகன் ஆர் கார்களைவிட எடை குறைவானதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆல்ட்டோ கார் 730 கிலோ எடையும், வேகன் ஆர் கார் 803 கிலோ கெர்ப் எடையும் கொண்டிருக்கும் நிலையில், புதிய எஸ் பிரெஸ்ஸோ காரின் பேஸ் வேரியண்ட் 726 கிலோ மட்டுமே எடை கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் 3,565 மிமீ நீளமும், 1,520 மிமீ அகலமும், 1,564 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த கார் 2,380 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டது. இந்த காரில் 27 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இது ஆல்ட்டோ (35 லிட்டர்) மற்றும் வேகன் ஆர் (32) கார்களைவிட மிக குறைவு.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. குறிப்பாக, இதன் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

இந்த காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சசார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் ஆகியவை இடம்பெற இருக்கின்றன.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

ஸ்டான்டர்டு மற்றும் எல்எக்ஸ்ஐ ஆகிய பேஸ் வேரியண்ட்டுகளில் ஏசி வசதியும், பவர் ஸ்டீயரிங் சிஸ்டமும் வழங்கப்பட இருக்கின்றன. விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ், பாடி கலர் பம்பர், வீல் கவர்கள் கொடுக்கப்படும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் உண்டு.

ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களைவிட எஸ் பிரெஸ்ஸோ எடை குறைவு!

விஎக்ஸ்ஐ ப்ளஸ் என்ற விலை உயர்ந்த வேரியணட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். டியூவல் ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட்டு இருக்கும். அலாய் வீல்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா வசதிகள் இல்லை.

Source: Autocarindia

Most Read Articles
English summary
Ahead of its launch, a number of details regarding the upcoming Maruti S Presso has been revealed. This includes its dimensions, variants, powertrain and features. Now, Autocar India reports that the new S-Presso hatchback will also be part of Maruti Suzuki's Heartect platform.
Story first published: Saturday, September 14, 2019, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X