ஒரே மாதத்தில் 5,006 யூனிட் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை... ரெனால்ட் க்விட்டையும் முந்தியது
எஸ்-பிரெஸ்ஸோ மாடல் காரை சமீபத்தில் இந்திய மார்கெட்டில் மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இதன் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.3.69 லட்சமாகவும் நிர்ணயக்கப்பட்டது. இதற்கு போட்டியாக ரெனால்ட் நிறுவனம் க்விட் மாடல் காரை சந்தையில் இறக்கியது.

இவ்விரு கார்களுக்கும் இடையில் விற்பனை போட்டி சூடுப்பிடித்து வந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ 5,006 யூனிட்கள் விற்பனையானது மட்டுமல்லாமல் போட்டி மாடல் காரான ரெனால்ட் க்விட்டையும் தோற்கடித்துள்ளது.

கடும் விற்பனை போட்டியின் முடிவில் ரெனால்ட் க்விட் 2,995 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இக்காரில் காஸ்மெடிக் மாற்றம் என நவீன தொழிற்நுட்பங்களால் பல அப்டேட்கள் செய்யப்பட்டிருந்தன.

எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பிராண்ட் மாடலாக வலம் வருகிறது. இந்திய மார்கெட்டில் மாருதியின் ஆல்டைம் பேவரட்டான ஆல்டோ கே10-ஐ விட தற்போது எஸ்-பிரெஸ்ஸோ தான் முன்னிலை வகிக்கிறது. இதன் டிசைன், அதிகமான பரப்பை ஆக்கிரமித்தல் போன்றவை எஸ்-பிரெஸ்ஸோ காருக்கு எஸ்யூவிக்கான அந்தஸ்த்தை பெற்று தருகின்றன.

| Rank | Models | September 2019 | Septmeber 2018 | Difference (%) |
| 1 | Maruti Alto | 15,079 | 21,719 | -30.57 |
| 2 | Maruti Wagonr | 11,757 | 13,252 | -11.28 |
| 3 | Maruti S-Presso | 5,006 | 0 | - |
| 4 | Maruti Celerio | 4,140 | 9,208 | -55.04 |
| 5 | Hyundai Santro | 3,502 | 0 | - |
| 6 | Tata Tiago | 3,068 | 8,377 | -63.38 |
| 7 | Renault Kwid | 2,995 | 5,529 | -45.83 |
| 8 | Datsun redi-GO | 842 | 1,658 | -49.22 |
| 9 | Datsun GO | 136 | 597 | -77.22 |
மேலேயுள்ள செப்டம்பர் மாதம் விற்பனையான மாடல் கார்களின் அட்டவணையில் பார்க்கும்போது, மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ 5,006 யூனிட்கள் விற்பனையாகி இந்திய மார்கெட்டில் மூன்றாவது சிறந்த விற்பனையான ஹேட்ச்பேக் என்ற பெயரை பெற்றுள்ளது. இதற்கு மேலே 1வது மற்றும் 2வது இடங்களில் மாருதி ஆல்டோ மற்றும் மாருதி வேகன்ஆர் உள்ளன.

ரெனால்ட் க்விட் இந்த லிஸ்ட்டில் மிகவும் பின்தங்கி 7வது இடத்தை பிடித்துள்ளது. 2,995 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த மாடல் கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 45 சதவீதம் வீழ்ச்சியை அடைந்துள்ளது.

மொத்த ஹேட்ச்பேக் (எண்ட்ரி-லெவல், மிட் மற்றும் ப்ரீமியம்) வகைகளில் பார்த்தால் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த மாதத்தில் விழா காலத்தையொட்டி பிரபலமான மாடல்களுக்கு பல சலுகைகளை மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளதால் எஸ்-பிரெஸ்ஸோவின் விற்பனை வளர்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சலுகைகள் குறித்த முழுவிபரத்தை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவில் சிங்கிள்1.0 லிட்டர் பெட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது. ஆல்டோ கே10ல் உள்ளது போல் 998சிசி மூன்று-சிலிண்டர் யூனிட் இந்த எஸ்-பிரெஸ்ஸோவிலும் உள்ளது. மாருதி நிறுவனம் எஸ்-பிரெஸ்ஸோவின் என்ஜினை பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைக்களுக்கு உட்படுத்தியுள்ளது.

ஐந்து நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட இதன் 1.0 லிட்டர் என்ஜின் 67 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பையும் இத்துடன் மாருதி நிறுவனம் வழங்குகிறது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மாடல், பியூட்சர்-எஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டு 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. மாருதி நிறுவனத்தால் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட மினி சைஸ் எஸ்யூவி காரும் இதுதான்.


Click it and Unblock the Notifications