மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்கள், படத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

எஸ்யூவி ஸ்டைலுடன் மிக குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கார் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து, அதே போன்ற ஒரு மாடலை களம் இறக்க மாருதி முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில் புதிய காரை உருவாக்கி இருக்கிறது மாருதி.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

கடந்த சில மாதங்களாக தீவிர சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த காரின் ஸ்பை படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக காரின் முழுமையான டிசைனை காண்பதற்கான வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

இந்த காரின் முதல் படத்தை ஆட்டோகார் இந்தியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. sமுன்பக்க க்ரில் அமைப்பு மாருதி பிரெஸ்ஸாவையும், மஹிந்திரா எஸ்யூவி மாடல்களையும் பிரதிபலிப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

அதேபோன்று, வலிமையான முன்புற பம்பர் அமைப்பு, 14 அங்குல ஸ்டீல் வீல்கள், பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகளுடன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸை இந்த கார் பெற்றிருக்கிறது. பின்புறத்தில் ஆல்ட்டோ காரின் சாயல் தெரிந்தாலும் ஒரு எஸ்யூவி ஸ்டைலுக்கு மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

இந்த காரின் டிசைன் நிச்சயம் பட்ஜெட் வாடிக்கையாளர்களையும், மாருதி கார் பிரியர்களையும் பெரிதும் கவரும். இதன் எஸ்யூவி ஸ்டைலிலான தோற்றமும் நிச்சயம் வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

ஆல்ட்டோ கே10 உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

புதிய மாருதி ஆல்ட்டோ காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கியர்பாக்ஸ் தேர்வுகள் அடிப்படையில் 4 வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

இந்த காரின் உட்புறமும் நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ள.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஒப்பான அம்சங்களுடன் இந்த பட்ஜெட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முதல் படம் வெளியானது!

புதிய மாருதி எஸ்- பிரெஸ்ஸோ கார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட், டாடா டியாகோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Image source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Saturday, September 7, 2019, 17:03 [IST]
English summary
The new spy pics of the Maruti Suzuki S-Presso have surfaced revealing its exterior design. New images by Autocar India, reveal the S-Presso completely undisguised. The S-Presso will go on sale in the Indian market on September 30th, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+