பட்ஜெட் விலையில் வரும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

எஸ்யூவி ஸ்டைலில் வர இருக்கும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பட்ஜெட் காரின் அறிமுக தேதி விபரம் கசிந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

எஸ்யூவி பாடி ஸ்டைலில் மிக குறைவான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் காருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மாருதியின் கண்ணை உறுத்தி வந்தது. ரெனோ க்விட் காருக்கு போட்டியான மாடலை களமிறக்குவதற்கான திட்டங்களையும் தீட்டியது. கடந்த இரு ஆண்டுகளாகவே இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து வந்தது.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

அதன்படி, கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், ஃப்யூச்சர் எஸ் என்ற புதிய கான்செப்ட்டை காட்சிப்படுத்தியது. இந்த கான்செப்ட் அடிப்படையில் மினி எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கான்செப்ட் அடிப்படையில் மிக குறைவான பட்ஜெட்டில், புத்தம் புதிய க்ராஸ்ஓவர் எஸ்யூவி கார் மாடலை மாருதி உருவாக்கி இருக்கிறது.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய பட்ஜெட் கார் பல மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

சோதனை ஓட்டப் படங்களில் இந்த கார் க்ராஸ்ஓவர் எஸ்யூவி பாடி ஸ்டைலில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, இது மாருதி பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் அடுத்த மாதம் 30ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. மாருதி வேகன் ஆர் கார் போன்றே, இந்த காரிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும், சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

ரெனோ க்விட் கார் போன்றே, இந்த காரிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகளை எதிர்பார்க்கலாம். மேலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்த மாடலாக இருக்கும் வாய்ப்புள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட், டாடா டியாகோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும். மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க், விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் போன்றவை இதற்கு கூடுதல் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, August 23, 2019, 17:18 [IST]
English summary
According to report, Maruti Suzuki is planning to launch the S-Presso crossover model on September 30, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+