அறிமுகமானது மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ... இக்காரின் டாப்-5 சிறப்பம்சங்கள் இதோ
வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-பிரெஸ்ஸோ மாடல் விற்பனைக்கு வந்துவிட்டது. இது பட்ஜெட் கார் வகையை சேர்ந்ததால் இதன் விலை ரூ.3.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2018ல் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசுகியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையிலான இந்த கார் பெரும்பாலான அம்சங்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த கார் மேலும் சில சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த காரின் டாப்-5 சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1.எஸ்யூவி-கான பண்புகள்
எஸ்யூவி காருக்களுக்கே உண்டான மிடுக்கு, உயரம், சரியான நிலைப்பாடு, கச்சிதமான அளவுடன் கம்பீரமான தோற்றத்தை இந்த மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் கொண்டுள்ளது.

2. சிறிய அளவு
இந்த எஸ்-பிரெஸ்ஸோ கார் அளவில் சிறியது என்பதால் காரில் உண்டாகும் சிறு அளவு சத்தம் கூட நமக்கு துல்லியமாக கேட்கும். சிறியதாக இருந்தாலும் நமது கால்களுக்கு ஏற்ற அளவு உள்ளே இடைவெளிகளும், இடவசதிகளும் உள்ளன. இந்த காரின் நீளம் 3,565 மில்லி மீட்டர், அகலம் 1,520 மிமீ, உயரம் 15641549 மிமீ ஆக உள்ளது. முன்புற சக்கரங்களுக்கும் பின்புற சக்கரங்களுக்கும் இடைப்பட்ட வீல் பேஸ்ஸ தூரம் 2,380 மிமீ என்பது இந்த காரின் முக்கிய பரிமாண அளவுகளாகும்.

3.உயரமான நிலைபாடு
விலை உயர்ந்த டாப் வேரியண்ட்கள் 14 இன்ச் சக்கரங்களுடனும், விலை குறைவான மற்ற வேரியண்ட்கள் 13 இன்ச் சக்கரங்களுடன் உள்ளது. இந்த கார் டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் மிக உயரமான மாடலாக தெரிகிறது.

4.பெரியளவிலான முன்பக்க பகுதி
எஸ்-பிரெஸ்ஸோ காரின் முன்பக்கமானது மெல்லியதான கிரில் அமைப்பையும் சதுர வடிவிலான ஹெட்லைட்டையும் இரட்டை பம்பர் அமைப்பையும் கொண்டுள்ளதால் இந்த பகுதியை பார்ப்பதற்கு விட்டாரா பிரெஸ்ஸாவில் உள்ளது போல் காணப்படுகிறது.

5.பெட்டகம் போன்ற தோற்றம்
மொத்தமாக இந்த கார், பெட்டி போன்ற சதுர வடிவில் உள்ளது. காரின் பின்புறத்தில் செவ்வகம் வடிவிலான விளக்குகளும் இரட்டை பம்பர் அமைப்புடன் திசை காட்டி விளக்குகளும் உள்ளன.

இக்காரின் பிஎஸ்-விஐக்கு இணக்கமான 1 லிட்டர் என்ஜின் 68 பிஎச்பி பவர் மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் மாசு உமிழ்வு அமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எஸ்-பிரெஸ்ஸோ கார், மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

| Variant | Prices |
| STD | Rs 3,69,000 |
| LXI | Rs 4,05,000 |
| VXI | Rs 4,24,500 |
| VXI+ | Rs 4,48,000 |
| VXI AGS | Rs 4,67,500 |
| VXI+ AGS | Rs 4,91,000 |
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காருக்கு போட்டியாக கருதப்படும் இக்காரின் விலைப்பட்டியலும் வெளியாகியுள்ளது. அதாவது எந்தெந்த வேரியண்ட்கள் எவ்வளவு விலையில் விற்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் மேலேயுள்ள அட்டவணையில் உள்ளன.


Click it and Unblock the Notifications