மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

மிக சவாலான ஆரம்ப விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களை வேரியண்ட் வாரியாக பார்க்கலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

மாருதியின் இந்த புதிய பட்ஜெட் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ளது. மேனுவல் மற்றும் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஸ்டான்டர்டு, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் வசதிகள் மற்றும் விலை அடிப்படையில் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது 4 வேரியண்ட்டுகளிலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது விலை உயர்ந்த இரண்டு டாப் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

ஸ்டான்டர்டு

விலை: ரூ.3.69 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

இந்த வேரியண்ட்டில் இரட்டை அறையுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், சி வடிவிலான விசேஷ டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், பக்கவாட்டில் பாடி கிளாடிங் சட்டங்கள், டைனமிக் சென்ட்ரல் கன்சோல் அமைப்பு, சாய்மான வசதியுடன் முன் இருக்கைகள்,, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இம்மொபைலைசர், பெடஸ்ட்ரியன் புரொடெக்ஷன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் ஆகிய வசதிகள் உள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

எல்எக்ஸ்ஐ வேரியண்ட் விபரம்

விலை: ரூ.4.05 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

ஸ்டான்டர்டு என்ற விலை குறைவான வேரியண்ட்டில் இருக்கும் சிறப்பம்சங்களுடன் கூடுயதலாக முன்புற கேபின் விளக்குகள், பவர் ஸ்டீயரிங், ஹீட்டருடன் கூடிய ஏசி சிஸ்டம், முன்புற பயணிக்கான ஏர்பேக் (ஆப்ஷனல்), ப்ரீ டென்ஷனர் சீட் பெல்ட்டுகள், பாதுகாப்பு மிக்க ரியர் டோர் லாக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

விஎக்ஸ்ஐ வேரியண்ட் விபரம்

விலை

மேனுவல்: ரூ.4.24 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

ஏஎம்டி: ரூ.4.67 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக ரூஃப் ஆன்டெனா, பாடி கலர் பம்பர்கள், முழுமையான வீல் கவர்கள், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், நிகழ்நேர எரிபொருள் செலவு, ரிமோட் கீ லெஸ் என்ட்ரி வசதி, முன்புற ஜன்னல்களுக்கு பவர் விண்டோஸ் வசதி, ஸ்மார்ட்ப்ளே டாக் சிஸ்டம், 2 ஸ்பீக்கர்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், குறிப்பிட்ட வேகத்தில் தானியங்கி முறையில் கதவுகள் தாழிட்டுக் கொள்ளும் வசதிகள் உள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

விஎக்ஸ்ஐ ப்ளஸ்

விலை

மேனுவல்: ரூ.4.48 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

ஏஎம்டி: ரூ.4.91 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

டாப் வேரியண்ட்டில் பாடி கலர் சைடு மிரர்கள், பாடி கலர் கதவு கைப்பிடிகள், சைடு மிரர்களை உட்புறத்திலிருந்து அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, 7.0 அங்குல ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், குறைவான எரிபொருள் குறித்த எச்சரிக்கை, டோர் திறந்திருப்பது குறித்த எச்சரிக்கை வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் எந்த வேரியண்ட் பெஸ்ட்?

எது பெஸ்ட்?

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே போதுமான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஏஎம்டி வேரியண்ட்டானது சிறந்த தேர்வாக இருக்கும். நகர்ப்புற பயன்பாட்டிற்கு இரு பாலரும் எளிதாக ஓட்டக் கூடிய தேர்வாகவும், சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் உட்புறத்தில் உயரமானவர்களும் எளிதாக அமர்ந்து செல்வதற்கான வாய்ப்பை இந்த கார் வழங்கும். விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஏஎம்டி வேரியண்ட்டிற்கு ரூ.4.91 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2019, 15:24 [IST]
English summary
Maruti Suzuki has launched the S-Presso in the Indian market. The new Maruti S-Presso is available with a price tag of Rs 3.69 lakh, ex-showroom (Delhi). The new Maruti S-Presso is positioned above the Alto K10 and creates a brand-new Mini-SUV segment in the market — here are the details.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+