சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

மாருதி சுஸுகி நிறுவன் இந்த வருடத்திற்கான சம்மர் கேம்பினை தொடங்கியுள்ளது. இதில், வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சர்வீஸ் மற்றும் பாகங்கள் மாற்றித் தரப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் இந்தியா வாடிக்கையாளர்களுக்காக இலவச சம்மர் கேம்பை தொடங்கியுள்ளது. இந்த கேம்ப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ், செக்அப் மற்றும் சலுகை விலையில் உதிரிபாகங்கள் மாற்றுதல் உள்ளிட்ட சேவை மேற்கொள்ளப்பட உள்ளன.

சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

மாருதி சுஸுகியின் இந்த கேம்ப் வருகின்ற 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பங்குபெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வாகனம் குறித்த பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு, காரின் ஏசி, ஆயில், கூலண்டு, எலக்டிரிக்கல் வேலை மற்றும் டயர் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

இந்த சம்மர் கேம்ப் நாடு முழுவதும் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2,200 சர்வீஸ் மையங்களில் நடைபெற்று வருகின்றது. இதில், சர்வீஸுக்கு விடப்படும் கார்களை மாருதி சுஸுகியின் சர்வீஸ் டெக்னீசியன்கள், காரின் அனைத்து பாகங்களையும் முழுமையாக பரிசோதிக்கின்றனர். குறிப்பாக ஏசி உள்ளிட்ட சில பாகங்கள்மீது முக்கிய கவனம் செலுத்தி பார்வையிடுகின்றனர்.

READ MORE: டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் சர்வீஸ் துறையின் இயக்குநர் கூறியதாவது, "மாருதி சுஸுகி நிறுவனம் நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை சர்வீஸ் செய்து வருகிறது. இந்த சம்மர் கேம்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

அந்தவகையில், ஏசி மற்றும் எலக்ட்ரிக் பிரச்னைகள் முழுமையாக தீர்க்கப்பட உள்ளன. எங்கள் வாடிக்கையாளர்கள் தொந்தரவு இல்லாத பயணத்தை அனுபவிக்கும் விதமாக இந்த சம்மர் சர்வீஸ் கேம்ப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் கேம்ப் மூலம், வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் இடையூறுகள் நீக்கப்படும் என உறுதியாக நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

இந்த சர்வீஸ் கேம்பினை மாருதி சுஸுகி நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு, கடந்த வருடம் நடைபெற்ற இந்த கேம்பில் 2.2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சர்வீல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, நடப்பாண்டிற்கான சம்மர் சர்வீஸ் கேம்பினை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இது வருகின்ற 30ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

READ MORE: புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!

இதுதவிர்த்து, மாருதி சுஸுகி நிறுவனம், அதன் தயாரிப்புகளை புதுப்பிக்கப்பட்ட எஞ்ஜின்களுடன் அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு அண்மையில், அந்த நிறுவனத்தின் சியாஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்ட பலினோ காரை அறிமுகம் செய்யும் பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Announces Free Summer Camp — Get Your Cars Summer Ready For Free! Read In Tamil.
Story first published: Saturday, April 20, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X