சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் டீசல் எஞ்ஜின் கார்கள்மீது சலுகை வழங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

விரைவில் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 இந்தியாவில் நடைமுறைக்கு

வரவுள்ளது. இதன்காரணமாக, முந்தைய மாசுபாட்டு விதியில் தயாரான வாகனங்களை சிறப்பு சலுகையில் வழங்க மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதேசமயம், இந்த புதிய விதியின் காரணமாக, அந்நிறுவனம் கணிசமான எஞ்ஜின் மாடல் வாகனங்களை உற்பத்தியில் இருந்து விலக்கிக் கொண்டது. இந்த முடிவால், 1.3 லிட்டர் கொள்ளவு கொண்ட டீசல் எஞ்ஜின் காரை மாருதி சுஸுகி இனி தயாரிக்காது என்ற உறுதியான தகவல்கள் அண்மையில் வெளியாகின.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

ஆகையால், வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் பிஎஸ்-6 தரத்திற்கு குறைவான வாகனங்களின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது. எனவே, மாருதி சுஸுகி நிறுவனம், தற்போது தன் வசம் உள்ள அனைத்து பிஎஸ்-4 தரத்திலான வாகனங்களை மக்களிடம் சேர்க்கும் விதமாக, 5 வருட வாரண்டியில் பிஎஸ்-4 தரத்திலான வாகனங்களை விற்பனைச் செய்ய முயற்சித்து வருகின்றது.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

இந்த தகவலின்படி, மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூலம் விற்பனையாகும் 1.3 லிட்டர் பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினைக் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் 5 வருடம் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் என்ற வாரண்டி வழங்கப்பட உள்ளது.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

இந்த 1.3 லிட்டர் ஃபியட் எஞ்ஜின் ஸ்விஃப்ட், டிசையர், எஸ் கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று, எர்டிகா மற்றும் சியாஸ் கார்களிலும் இதே எஞ்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், இவை இம்மாதம் இறுதி வரை மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகின்றது.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

அதேசமயம், எர்டிகா மற்றும் சியாஸ் மாடல்கள் பிரத்யேகமாக 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகிய ஆப்ஷனைக் கொண்ட பிஎஸ்4 தரத்திலும் கிடைக்கின்றது. ஆகையால், இச்சலுகை மேற்கூறிய மாடல் கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிகின்றது.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினை சொந்தமாக தயாரித்து வருகின்றது. இது, தற்போது பிஎஸ்-4 தரத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனை பிஎஸ்-6 தரத்திற்கு அப்டேட் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், அது தற்போது விதிக்கப்பட்டுள்ள 1 ஏப்ரல் கால கெடுவிற்குள் அல்ல. மாறாக, பிஎஸ்6 தரத்தில் உள்ள பெட்ரோல் எஞ்ஜினின் விற்பனையைப் பொருத்து, டீசல் எஞ்ஜின் தயாரிக்கப்பட உள்ளது.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

இதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என கூறப்படுகின்றது.

முக்கியமாக, பிஎஸ்-6 டீசல் எஞ்ஜின் கார், பிஎஸ்-4 தரத்திலான டீசலில் இயங்காது. ஆனால், பிஎஸ்-6 பெட்ரோல் கார், பிஎஸ்-4 தரத்திலான பெட்ரோலில் இயங்கும். இதுபோன்ற சில காரணங்களாலேயே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பிஎஸ்-6 டீசல் எஞ்ஜின் கார்கள் தயாரிப்பினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

ஆகையால், பிஎஸ்-6 தரத்திலான எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து, வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் வாகனங்களைக் களமிறக்க உள்ளன.

ஆகையால், 2021ம் ஆண்டிற்கு பின்னர்தான் சிறிய எஞ்ஜின் கொண்ட டீசல் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பது உறுதிச் செய்யப்படும்.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

இதுகுறித்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது, "டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா உள்ளிட்டவை இந்தியாவில் மிகவும் பிரபலமான மாடல்களாக உள்ளன. இவை, அவற்றின் செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்களால் பலரின் மனதைக் கொள்ளைக் கொண்டுள்ளது. ஆகையால், இந்த முன்னோடி மாடல்கள் எங்களின் எதிர்கால தயாரிப்புகளில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.

சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்!

மேலும் பேசிய அவர், "தற்போது சலுகை அறிவிக்கப்பட்ட மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, நீண்ட நாட்களுக்கு அவர்களுடன் துணை நிற்கும் வகையில், 5 ஆண்டு/ 1 லட்சம் கீலோ மீட்டர் வாரண்டி வழங்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.

இந்த 4 மாடல் டீசல் எஞ்ஜின் கார்களும் தற்போது இந்தியாவில் 29 லட்சத்திற்கும் மேற்பட்டோர்களின் அபிமான வாகனமாக இருந்து வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2019, 14:51 [IST]
English summary
Maruti Suzuki Announces 5 yr Warranty For Swift, Dzire, S Cross, Brezza diesel. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+