வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்... !!
புதிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள் இந்திய கார் ஷோரூம்களின் சேவை தரத்தை புதிய அத்யாயத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
கார் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 நிறுவனமாக விளங்கும் மாருதி கார் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையிலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர் சேவை தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் விதமாக, அரேனா என்ற பெயரில் நவீன கட்டமைப்புகளுடன் கூடிய கார் ஷோரூம்களை மாருதி நிறுவனம் திறந்து வருகிறது.

அனுபவம் புதுமை
நவீன தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வசதிகள், உன்னதமான வாடிக்கையாளர் உபசரிப்பு ஆகியவற்றுடன் இந்த புதிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன மேலும், மெய்நிகர் காணொளி தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர் சேவையில் புதுமையையும் இந்த மாருதி கார் ஷோரூம்கள் வழங்குகின்றன.

மெய்நிகர் தொழில்நுட்ப வசதி
மாருதி அரேனோ ஷோரூம்களில் உள்ள மின்னணு திரைகள் மூலமாக, அனைத்து கார் மாடல்களையும் நேரில் காண்பது போன்ற உணர்வையும், அதன் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற முடியும்.
இதுமட்டுமின்றி, தங்களது கார் மாடலுக்கு தேவையான ஆக்சஸெரீகளை இந்த திரைகள் மூலமாக தேர்வு செய்து பொாருத்தி, நேரடியாக தமது கார் எவ்வாறு இருக்கும் என்பதையும் வாடிக்கையாளர்கள் மெய்நிகர் வசதி மூலமாக பார்க்க முடியும்.
பயிற்சி பெற்ற சேவை அதிகாரிகள்
தவிரவும், பயிற்சி பெற்ற வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையையும் இந்த மாருதி அரேனா ஷோரூம்கள் வழங்குவது முக்கிய அம்சம். கார் வாங்கும் நடைமுறை குறித்த பல்வேறு விஷயங்களையும், சந்தேகங்களையும் இந்த சேவை அதிகாரிகள் மூலமாக வாடிக்கையாளர் தெளிவு பெறலாம்.

உற்சாகத்தை கூட்டும்
வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்தில் கொண்டு மாருதி அரேனா கார் ஷோரூம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கார் வாங்கும் ஒவ்வொரு நிலையையும் மனம் நிறைந்த உற்சாகத்துடன் வாடிக்கையாளர்கள் கடந்து சென்று தங்களது கனவை நனவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை இந்த அரேனா ஷோரூம்கள் வழங்கும். மாருதி அரேனா ஷோரூம்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான சில முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கார் வாங்கும் நடைமுறை
சிறிய திரையில் போன் நம்பரை பதிவு செய்து முன்பதிவு துவங்கி டெஸ்ட் டிரைவ் மற்றும் கார் டெலிவிரி பெறுவது வரையிலான அனைத்து நடைமுறைகளையும் மாருதி அரேனா ஷோரூம்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தை பெற முடியும்.

காஃபி கஃபே
கார் வாங்க அரேனா ஷோரூம்கள் வரும் வாடிக்கையாளர்கள் புத்துணர்வுடன் மகிழ்ச்சியான அனுபவத்தை பெறும் வகையில் உயர்தர காஃபி வழங்கப்படும். இது வாடிக்கையாளர்களின் மனதில் நேர்மறை சிந்தனையுடன் கார் வாங்கும் படலத்தை துவங்க வாய்ப்பாக அமையும்.
எளிய விளக்கமுறை
மாருதி அரேனா ஷோரூம்களில் இருக்கும் பெரிய திரை மூலமாக வாடிக்கையாளர் வாங்க விரும்பும் காரின் சிறப்பம்சங்களை சேவை அதிகாரி விளக்கி கூறும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஐ- கிரியேட்
தங்களது காரை தனித்துவப்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, விரும்பும் வண்ணங்கள், கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் அலங்காரத்தை மின்னணு திரை மூலமாக தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு மாருதி அரேனா ஷோரூம்கள் வழங்குகின்றன.
வாடிக்கையாளர் ஓய்வு அறை
காரை டெலிவிரி எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கான உயர்தர ஓய்வு அறையும் மாருதி அரேனா ஷோரூம்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், மாருதி அரேனா ஷோரூம்களில் வழங்கப்படும் சேவைகள் குறித்த குறிப்புகளையும் இங்கே வாடிக்கையாளர்கள் பெறலாம்.

புதிய அத்யாயம்
மொத்தத்தில் புதிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள் இந்திய கார் ஷோரூம்களின் சேவை தரத்தை புதிய அத்யாயத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. கார் வாங்கும் நடைமுறை, கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம், உபசரிப்பு முறை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு புதுமைகளுடன் புதிய அனுபவத்தை அரேனா கார் ஷோரூம்கள் வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


Click it and Unblock the Notifications








