மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

குறைவான மாசு உமிழ்வு, அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான முதல் மாருதி கார் மாடலாக அறிமுகமாகி உள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்தை பெறுவதற்காக இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகளையும், அதன் பயன்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

டியூவல் பேட்டரி எஸ்எச்விஎஸ் சிஸ்டம்

மாருதி பலேனோ காரின் ஹைப்ரி்ட் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் டியூவல்ஜெட் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. நான்கு சிலிண்டர்களிலும் தலா இரண்டு இன்ஜெக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வழக்கமான லீட் ஆசிட் பேட்டரி இருப்பதுடன் கூடுதலாக லித்தியம் அயான் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

ஐஎஸ்ஜி ஜெனரேட்டர்

ஐஎஸ்ஜி ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்து பேட்டரியில் சேமிக்கப்படுவதுடன், ஆரம்ப நிலையில், பெட்ரோல் எஞ்சினுக்கு கூடுதல் டார்க் திறனை வழங்கும் இரட்டை பயன்பாட்டு மோட்டாராக இது செயல்படும். இதன் மூலமாக ஆரம்ப வேகத்தில் பெட்ரோல் எஞ்சினுக்கான சுமை குறைந்து அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்க வழி செய்கிறது. இந்த ஐஎஸ்ஜி மோட்டார் கிராங்சாஃப்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

ஸ்டார்ட் - ஸ்டாப் நுட்பம்

குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நின்றிருந்தால் எஞ்சின் இயக்கம் தானாக நின்றுவிடும். ஆக்சிலரேட்டரை கொடுக்கும்போது எஞ்சின் மீண்டும் உயிர்பெற்றுவிடும். இதன்மூலமாக, தேவையற்ற எரிபொருள் இழப்பு தவிர்க்கப்படுகிறது.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டம்

பிரேக் பிடிக்கும்போது ஐஎஸ்ஜி மின் மோட்டார் ஜெனரேட்டர் போன்று செயல்பட்டு, சக்கரங்களின் சுழற்சியின் துணையுடன் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும். காரின் ஆக்சிலரேட்டரை கொடுக்கும்போது மீண்டும் பேட்டரியில் சேமிக்கப்படும் மின் ஆற்றலை எடுத்துக் கொண்டு ஐஎஸ்ஜி மோட்டார் பெட்ரோல் எஞ்சினுக்கு கூடுதல் டார்க் திறனை வழங்கும் வகையில் செயல்படும்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

குறைவான மாசு உமிழ்வு

இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த 1.2 லிட்டர் K12B பெட்ரோல் எஞ்சினைவிட இந்த புதிய K12C பெட்ரோல் எஞ்சினின் நைட்ரஜன் ஆக்சைடு மாசு உமிழ்வு 25 சதவீதம் வரை குறைவு. ஒரு சிலிண்டருக்கு இரண்டு இன்ஜெக்டர்கள் கொடுக்கப்பட்டு இருப்பதன் மூலமாக சீரான வெப்பத் திறனை தக்க வைத்து எஞ்சின் ஆற்றலை வெளிப்படுத்தும். அத்துடன், இதன் இசியூ சாதனம் எரிபொருள் செலுத்துவதை துல்லியமாக கட்டுப்படுத்தும்.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

மைலேஜ்

மாருதி பலேனோ ஹைப்ரிட் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜை வழங்கும். அதாவது, பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அதிக மைலேஜை வழங்கும் பெட்ரோல் மாடலாகவும் இது பெருமை பெறுகிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்திற்கு இணையானது என்பதுடன் அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குவது சிறப்பு.

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்!

விலை

மாருதி பலேனோ காரின் ஹைப்ரிட் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். டெல்ட்டா வேரியண்ட் ரூ.7.25 லட்சத்திலும், ஸீட்டா வேரியண்ட் ரூ.7.86 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மதிப்பை தரும் மாடலாக இருக்கும்.

Article Published On: Thursday, April 25, 2019, 13:29 [IST]
English summary
Maruti Suzuki Baleno 1.2L Dualjet SHVS Technology Explained.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+