மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

மாருதி பலேனோ காரில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

மாருதி கார் நிறுவனம் தனது கார்களின் பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட தேர்வுகளையும் வழங்கி வருகிறது. குறைவான மாசு உமிழ்வு, அதிக மைலேஜ் வழங்கும் இந்த மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

மாருதி பலேனோ பிரிமீயம் ஹேட்ச்பேக் காரிலும் ஸ்மார்ட் ஹைப்ரிட் என்ற பெயரில் இந்த தேர்வு வழங்கப்படுகிறது. டியூவல்ஜெட் பெட்ரோல் மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகராக இருப்பதுடன், அதிக திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தையும் தர வல்லதாக இருக்கிறது.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக எஞ்சினுக்கு கூடுதல் டார்க் திறன் தேவைப்படும்போது அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், மாருதி பலேனோ காரில் முழுமையான ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

அதாவது, பெட்ரோல் எஞ்சின் துணையின்றி, தனியாக செயல்படும் ஆற்றல் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாருடன் முழுமையான ஹைப்ரிட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ கார் சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த ஹைப்ரிட் சிஸ்டத்தை பாஷ் நிறுவனத்துடன் சேர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கி உள்ளது. சோதனை ஓட்டத்தில் இருக்கும் பலேனோ காரின் பின்புற வீல் ஆர்ச்சில் இ- டிரைவ் என்ற ஸ்டிக்கர் அந்த காரில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

இந்த காரில் 48V ஹைப்ரிட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலமாக, பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, மின் மோட்டார் இணைந்து செயல்படுவது மட்டுமின்றி, மின் மோட்டாரில் மட்டுமே இயங்கும் திறனை இந்த கார் பெற்றிருக்கும் என தெரிகிறது.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

இதன்மூலமாக, குறைந்த தூரத்திற்கு மின் மோட்டாரின் துணையில் பயணிக்கலாம். அதாவது, தினசரி அலுவலகம் மற்றும் நகர்ப்புறத்தில் மட்டும் பயணிக்கும் வாய்ப்பு இருப்பவர்கள், பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்தாமல் மின் மோட்டாரில் மட்டுமே காரை இயக்க முடியும்.

மாருதி பலேனோ காரில் 'ஸ்ட்ராங்' ஹைப்ரிட்... எலெக்ட்ரிக் கார் போல பயன்படுத்தும் வாய்ப்பு!

இதனால், மாசு உமிழ்வு இல்லாத சூழலையும், மிக குறைவான செலவீனத்தில் காரை இயக்கும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதன்மூலமாக, மாருதி பலேனோ காரின் மைலேஜ் என்பது மிக கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று, விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Image credits: Team BHP

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2019, 13:11 [IST]
English summary
German component manufacturer Bosch has been spotted testing the Maruti Suzuki Baleno (SHEV) Strong Hybrid Electric Vehicle in Bangalore. A Strong Hybrid Electric Vehicle basically means that the hybrid petrol powertrain of the car is assisted by an electric motor that features a high capacity 48V battery pack.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+