மாருதி சியாஸ் காரில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம்!
மாருதி சியாஸ் காரில் பூட்ரூமை திறப்பதற்கான புதிய தொழில்நுட்ப வசதி மிக மிக குறைவான விலையில் அளிக்கப்படுகிறது. அதன் விபரம், விலை உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ் கார் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வருகிறது. இருப்பினும், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களால் கடும் சந்தைப் போட்டியை சந்தித்து வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு, கடந்த மாதம் ஹூண்டாய் வெர்னா விற்பனையில் முதலிடத்தை பிடித்தது.

இதனால் அதிர்ந்து போயுள்ள மாருதி கார் நிறுவனம், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அட்டகாசமான புதிய வசதியை மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஆட்டோ டிரக் ஓபனர் என்ற புதிய வசதியை அளிக்கிறது.

அதாவது, ரிமோட் மற்றும் சாவி மூலமாக திறக்கும் வசதிகளை தவிர்த்து, புதிய சியாஸ் காரில் கெஸ்ச்சர் கன்ட்ரோல் எனப்படும் கால் நகர்வு மூலமாக பூட்ரூம் மூடியை திறக்கும் வசதி அளிக்கப்படுகிறது. பம்பருக்கு கீழ் பகுதியை காலை குறிப்பிட்ட முறையில் நகர்த்தினால் பூட் ரூம் மூடி தானாக திறந்து கொள்ளும்.

இந்த புதிய தொழில்நுட்ப வசதிக்கு ரூ.3,390 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2019 மாடல் சியாஸ் கார் மட்டுமல்ல, பழைய சியாஸ் கார்களிலும் இந்த ஆட்டோ டிரங்க் ஓபனர் என்ற வசதியை மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பொருத்திக் கொள்ளலாம்.

விலை உயர்ந்த கார்களில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்த அட்டகாசமான வசதியை, பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டுள்ளோரை கவரும் வகையில் இந்த வசதியை மிக குறைவான விலையில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சியாஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மாருதி சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இரண்டு எஞ்சின்களுமே பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானவைதான். ஆனால், பெட்ரோல் மாடலானது விரைவில் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்படும்.


Click it and Unblock the Notifications








