இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து 5வது மாதமாக இந்தியாவில் உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு இது போதாத காலம். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதனால் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருகின்றன. எனவே சரக்கு தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

இதில், நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் ஒன்று. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,48,959 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்தது. ஆனால் அதற்கு முந்தைய 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 1,62,524 வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது. அதாவது உற்பத்தியை 8 சதவீதத்திற்கும் மேலாக மாருதி சுஸுகி குறைத்து கொண்டது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

இதன்பின் வந்த மாதங்களிலும் மாருதி சுஸுகி வரிசையாக உற்பத்தியை குறைத்து கொண்டேதான் வந்தது. இதன்படி கடந்த மார்ச் மாதத்தில் உற்பத்தியை 20.9 சதவீதம் என்கிற அளவிற்கு மாருதி சுஸுகி குறைத்து கொண்டது. அத்துடன் அதன்பின் வந்த ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதம் என்கிற அளவிற்கும், மே மாதத்தில் 18 சதவீதம் என்கிற அளவிற்கும் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு மாருதி சுஸுகி தள்ளப்பட்டது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

இந்த சூழலில் தொடர்ந்து 5வது மாதமாக கடந்த ஜூன் மாதத்திலும் மாருதி சுஸுகி உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளது. சூப்பர் கேரி எல்சிவி உள்பட மொத்த வாகன உற்பத்தியை கடந்த ஜூன் மாதம் 15.6 சதவீதம் குறைத்துள்ளதாக மாருதி சுஸுகி தற்போது தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி 1,11,917 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு ஜூனில் 1,32,616ஆக இருந்தது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

கடந்த ஜூன் மாதம் மாருதி சுஸுகி உற்பத்தி செய்த மொத்த பயணிகள் வாகனங்களின் (Passenger Vehicle) எண்ணிக்கை 1,09,641 மட்டுமே. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஜூனில் 1,31,068ஆக இருந்தது. அதாவது பயணிகளின் வாகனங்களின் உற்பத்தியை 16.34 சதவீதம் என்கிற அளவிற்கு மாருதி சுஸுகி குறைத்து கொண்டுள்ளது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

அதே சமயம் ஆல்டோ உள்ளிட்ட மாடல்களை உள்ளடக்கிய மினி செக்மெண்ட்டின் கடந்த ஜூன் மாத உற்பத்தி எண்ணிக்கை 15,087. இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 29,131ஆக இருந்தது. இந்த செக்மெண்ட்டில் வாகனங்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் 48.2 சதவீதம் என்கிற அளவிற்கு குறைத்து கொண்டுள்ளது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

இந்த வரிசையில் வேகன் ஆர், ஸ்விப்ட் மற்றும் டிசையர் போன்ற காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் உற்பத்தியையும் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 1.46 சதவீதம் குறைத்துள்ளது. இந்த செக்மெண்ட்டின் கடந்த ஜூன் மாத உற்பத்தி எண்ணிக்கை 66,436. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 67,426ஆக இருந்தது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

அதேபோல் யுடிலிட்டி வெய்கில்களின் (Utility Vehicles) உற்பத்தியையும் மாருதி சுஸுகி நிறுவனம் 5.26 சதவீதம் குறைத்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் யுடிலிட்டி வாகனங்களின் கடந்த ஜூன் மாத உற்பத்தி எண்ணிக்கை 17,074. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு ஜூனில் 18,023ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேன்களின் உற்பத்தி கடந்த ஜூன் மாதம் 27.87 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாத உற்பத்தி எண்ணிக்கை 11,787. ஆனால் 2019ம் ஆண்டு ஜூன் மாத உற்பத்தி எண்ணிக்கை 8,501 மட்டுமே. ஏற்கனவே குறிப்பிட்டபடி விற்பனை சரிவடைந்து வருவதன் காரணமாகவே உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு மாருதி சுஸுகி தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

மாருதி சுஸுகி மட்டுமல்லாது பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனையும் சமீப காலமாக மந்தமாகதான் உள்ளது. எனவே வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் மாருதி சுஸுகி திணறல்... தொடர்ந்து 5வது மாதமாக உற்பத்தியை குறைத்ததற்கு காரணம் இதுதான்...

ஆனால் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாமல் தொடர்ந்து 28 சதவீதமாகவே நீடிக்கிறது. மத்திய அரசு தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Cuts Production In June 2019. Read in Tamil
Story first published: Wednesday, July 10, 2019, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X