சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

இந்திய கார் மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்து வரும் மாருதி டிசையர் கார் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் டாப் - 3 மாடல்களில் ஒன்றாக மாருதி டிசையர் கார் மிக நீண்டகாலமாக இருந்து வருகிறது. பல புதிய மாடல்கள் வந்தாலும், மாருதி டிசையர் மார்க்கெட்டை உடைக்க முடியவில்லை. நடப்பு ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை படுத்துக் கொண்ட போதிலும், டிசையர் கார் பக்கபலமாக இருந்து பெரிய சரிவிலிருந்து காத்து வருகிறது.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

இந்த நிலையில், மாருதி டிசையர் கார் விற்பனையில் 20 லட்சம் என்ற புதிய மைல்கல்லை தாண்டி இருக்கிறது. கடந்த ஏப்ரல் - நவம்பர் இடையிலான 8 மாதங்களில் மட்டும் 1.20 லட்சம் டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இது மிக அசாத்தியமான சாதனையாகவே பார்க்க முடியும்.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

ஏனெனில், கடந்த பல மாதங்களாக கார் மார்க்கெட் பல்வேறு காரணங்களால் தள்ளாடி வரும் நிலையிலும், டிசையர் காரின் விற்பனை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பதிவு செய்து வருகிறது.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

மாருதி டிசையர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் இருக்கும் வரவேற்பு குறித்து மாருதி சுஸுகி நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாருதி சுஸுகி விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு செயல் இயக்குனர் ஷசாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில்," மாருதி டிசையர் காரின் பாதியளவு வாடிக்கையாளர்கள் முதல்முறையாக கார் வாங்கியவர்கள். பலர் செடான் கார் ரகத்திற்கு மாற விரும்பி, டிசையர் காரை தேர்வு செய்தவர்கள்," என்று தெரிவித்துள்ளார்.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் தொடர்ந்து முதல் இடத்தை மாருதி டிசையர் கார் போட்டியாளர்களைவிட மிகப்பெரிய வித்தியாசத்தில் தக்க வைத்து வருகிறது. மேலும், இதன் ரக சந்தையில் 60 சதவீத பங்களிப்பையும் இந்த கார் பெற்று அசத்தி வருகிறது.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

மாருதி டிசையர் கார் மூன்றாம் தலைமுறை மாடல் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் முதல் விற்பனையில் உள்ளது. இந்த மாடலானது டிசைனில் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. அம்பாசடர் காரின் புதிய தலைமுறை மாடல் போல வாடிக்கையாளர் மனதில் இடம்பிடித்துவிட்டது.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

புதிய மாடலின் வீல்பேஸ் 20 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதால், பின் இருக்கையின் இடவசதி, கால் வைப்பதற்கான இடம் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் பல்வேறு டிசைன் மாற்றங்கள் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன், 12V சார்ஜ் சாக்கெட், ஆகியவை உள்ளன.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

இந்த காரில் 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 75 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் வழங்கும்.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

மிக விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் ஆட்டோ புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்டுகள், ரிவர்ஸ் கேமரா, க்ளெவர் டச்ஸ்கிரீன் ஆகிய வசதிகளும் உள்ளன.பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்ததாக இருக்கிறது.

சும்மா கிழி... விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய சாதனை

புதிய மாருதி டிசையர் கார் ரூ.5.82 லட்சம் முதல் ரூ.9.53 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், ஃபோர்டு ஆஸ்பயர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 24, 2019, 12:29 [IST]
English summary
Maruti Suzuki has sold more than 1.2 lakh units of its Dzire compact sedan in the first eight months (April-November) of FY20, claims the automaker in a release. The sedan claims to have crossed 2 million units sales mark recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+