மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

மாருதி எர்டிகா காரின் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி எர்டிகா கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவிலும் அசத்திய இந்த காருக்கு தற்போது பல மாதங்கள் காத்திருப்பு காலம் நிலவுகிறது. அண்மையில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்தநிலையில், மாருதி எர்டிகா காரின் ஸ்போர்ட் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோதே, இந்த மாடல் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்த நிலையில், மணிகன்ட்ரோல் தளத்தின் செய்தியின்படி புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்போர்ட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. மாருதி எர்டிகா காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும்.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடலில் விசேஷ பாடி கிட் ஆக்சஸெரீகள் மூலமாக மிக வசீகரமாக மாறுதல்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக, முன்புற, பின்புற பம்பர்களில் கூடுதல் ஆக்சஸெரீகள், ஸ்கிட் பிளேட், சைடு ஸ்கர்ட்டுகள், ரியர் ஸ்பாய்லர் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் காரில் தனித்துவமான டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருப்பதும் காரின் கவர்ச்சியை கூட்டுவதாக இருக்கிறது.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

உட்புறத்தில் முக்கிய மாற்றமாக 6 இருக்கை வசதி கொண்டதாக வர இருக்கிறது. நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. மர அலங்காரத் தகடுகள் கவர்ச்சியை கூட்டுவதாக இருக்கிறது.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடலில் ஸ்மார்ட்ப்ளே சிஸ்டமும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும்.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடல் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கலாம். சாதாரண மாடலைவிட ரூ.60,000 வரை கூடுதல் விலையில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Source: Moneycontrol

Article Published On: Monday, May 13, 2019, 12:21 [IST]
English summary
According to reports, Maruti suzuki is planning to launch a new top-end variant of the MPV, christened Maruti Suzuki Ertiga Sport by end of this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+