தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

தீபாவளி பண்டிகையின்போடு பட்ஜெட் விலையில் புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் பெயர் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி சுஸுகி மிக வலுவான வர்த்தகத்தை பெற்றிருக்கிறது. சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் தொடர்ந்து புதிய கார் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரெனோ க்விட் காருக்கு எதிராக புத்தம் புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலை களமிறக்க உள்ளது.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய மாடல் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. டிசைனில் சில மாறுதல்களுடன் இந்த கார் வர இருக்கிறது.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

இந்த காருக்கு எஸ் பிரெஸ்ஸோ என்று மாருதி பெயரிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி தெரிவிக்கிறது. வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

இந்த புதிய பட்ஜெட் கார் எஸ்யூவி போன்ற டிசைன் அம்சங்களுடன் வர இருப்பது கவனிக்கத்த விஷயமாக இருக்கிறது. அதாவது, ரெனோ க்விட் காருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த புதிய டிசைன் கொள்கையில் புதிய பட்ஜெட் காரை மாருதி கொண்டு வருகிறது.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

இந்த புதிய கார் முழுக்க முழுக்க இந்தியாவிலுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் மூலமாக உருவாக்கப்பட்டு இருப்பதும் மற்றொரு சிறப்பு. ஹரியானா மாநிலம், ரோதக் பகுதியில் செயல்படும் மாருதி மையத்தில்தான் இந்த காரின் அனைத்து உருவாக்கப் பணிகளும் நடந்தன.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

இதனால், சுஸுகி நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ராயல்டி தொகை அளவு கணிசமாக குறையும் என்று மாருதி சுஸுகி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாருதியின் அரேனா ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய கார் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

இந்த புதிய காரில் மாருதி ஆல்ட்டோ கே10 காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற இருக்கிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் டோன் இன்டீரியர் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்!

அதேபோன்று, பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பான கார் மாடலாக இருக்கும். வரும் தீபாவளிக்கு முன்னதாக இந்த புதிய காருக்கான அறிமுக விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை கொண்ட கார் மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2019, 11:50 [IST]
English summary
Maruti Suzuki is planning to launch new budget crossover car in India soon. It will be named as Maruti Suzuki S- Presso in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+