மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஃப்யூச்சரோ இ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் குறித்த முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் வெளியிடப்படும். மாருதி நிறுனத்தின் வேகன் ஆர் காரின் அடிப்படையிலான மாடலாக புதிய ஃப்யூச்சரோ இ கார் இருக்கும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

ஏனெனில், இந்தியாவில் 50 மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்கள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, ஃப்யூச்சரோ இ என்ற பெயரில் மாருதி கொண்டு வர இருக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் வேகன் ஆர் காரின் மின்சார மாடலாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் வேகன் ஆர் காரின் அடிப்படையிலான மாடலாக இருக்கும். அதேநேரத்தில், எலெக்ட்ரிக் மாடலுக்காக தேவையான மாற்றங்கள் டிசைனிலும், வடிவமைப்பிலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும்.

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

புதிய மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள் இடம்பெற்றிருக்கும். இந்த காரில் அலாய் வீல்களும் இடம்பெற்றிருக்கும்.

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

அதேபோன்று, உட்புறத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

MOST READ: ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்!

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

சாதாரண வேகன் ஆர் காரின் பரிமாணங்களுடன் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன்படி, 3,655 மிமீ நீளமும், 1,620 மிமீ அகலமும், 1,675 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,435 மிமீ ஆக உள்ளது.

MOST READ: புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

இந்த காரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாக நிலைநிறுத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

MOST READ: மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியத் தகவல்கள்!

புதிய மாருதி ஃப்யூச்சரோ இ எலெக்ட்ரிக் கார் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. மேலும், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரைவிட விலை குறைவான தேர்வாக நிலைநிறுத்தும் திட்டமும் மாருதியிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா டிகோர் கார் ரூ.9.44 லட்சம் முதல் ரூ.9.75 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has registered the Futuro-E name for its upcoming electric car, which will based on Wangor car. It is expected to launch below Rs.10 lakh budget.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X