புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் எதிர்பார்த்ததை போலவே, புக்கிங்கில் அசத்தி வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

மினி எஸ்யூவி ரகத்தில் எஸ் பிரெஸ்ஸோ என்ற புதிய பட்ஜெட் கார் மாடலை கடந்த 30ந் தேதி மாருதி கார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

அறிமுகம் செய்யப்பட்டு முதல் 11 நாட்களில் இந்த கார் 10,000 புக்கிங்குகளை பெற்றுள்ளது. இந்த காரின் டிசைன் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

பார்ப்பதற்கு எஸ்யூவி போன்ற உடல்மொழியுடன் ரூ.3.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் இந்த கார் வந்துள்ளது. இந்த கார் 180 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றிப்பதால், இந்திய சாலைகளை ஓட்டுபவர் எளிதாக எதிர்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

தவிரவும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்டவையும் இந்த காருக்கான மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக உள்ளன.

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

இந்த புதிய எஸ் பிரெஸ்ஸோ காரில் மாருதியின் நம்பகத்தன்மை வாய்ந்த 1.0 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரைும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மிக இலகுவான, அதேசமயத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு நிகரான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: சொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா?

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

இந்த காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் அலங்கார பாகங்கள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்டவை இந்த காரின் மதிப்பை உயர்த்துவதுடன் எஸ்யூவி போன்ற தோற்றத்தை பெற்றுத் தருகிறது.

MOST READ: இந்த காரில் பயணித்தால் யமனாக இருந்தாலும் உங்களை கேட்டுதான் தொட முடியும்: டாப் ரேட்டிங் கார்!

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

MOST READ: விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. பட்ஜெட் கார் வாங்குவோருக்கு பக்கா தேர்வாக இருக்கும். மாருதி நிறுவனத்திடம் இருந்து 10 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ள புத்தம் புதிய பட்ஜெட் விலை கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
The Maruti Suzuki S-Presso is receieved 10,000 bookings just 11 days since its launch in India.
Story first published: Saturday, October 12, 2019, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X