மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

மாருதி சுஸுகி நெக்ஸா இந்தியாவில் 4 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பீரிமியம் ரக கார்கள், நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பீரிமியம் ரக கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவம் மற்றும் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்தான் நெக்ஸா ஷோரூம்கள் திறக்கப்பட்டன.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

மாருதி சுஸுகி நிறுவனம் குறித்த வாடிக்கையாளர்களின் எண்ணங்களை உயர்வானதாக மாற்ற வேண்டும் என்பதும் நெக்ஸா ஷோரூம்கள் திறக்கப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம். ஆல்டோ போன்ற சாதாரண கார்களையும், பலேனோ போன்ற பீரிமியம் கார்களையும் ஒரே ஷோரூமில் வைத்து விற்பனை செய்வதை மாருதி சுஸுகி நிறுவனம் விரும்பவில்லை.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

இதன் விளைவாக உருவானதுதான் நெக்ஸா ஷோரூம்கள். இதன் மூலம் பீரிமியம் கார்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பீரிமியம் அனுபவம் உறுதி செய்யப்படுகிறது. எனினும் நெக்ஸா ஷோரூம்கள் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கை கொடுக்குமா? என்ற சந்தேகம் ஆரம்பத்தில் பலருக்கும் இருக்கவே செய்தது.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

ஆனால் அந்த சந்தேகங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி பிரம்மாண்ட வெற்றியை நெக்ஸா ஷோரூம்கள் பெற்றுள்ளன. இந்தியாவில் நெக்ஸா ஷோரூம்கள் திறக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிராண்ட் இமேஜை மட்டும் நெக்ஸா ஷோரூம்கள் உயர்த்தவில்லை. அதனுடன் விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றன.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்தியாவில் முதல் நெக்ஸா ஷோரூம் கடந்த 2015ம் ஆண்டு திறக்கப்பட்டது. முதல் ஷோரூம் திறக்கப்பட்ட 2 ஆண்டுகளில், நெக்ஸா ஷோரூம்களின் எண்ணிக்கை 250ஐ கடந்தது. தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட சூழலில், 350க்கும் மேற்பட்ட நெக்ஸா ஷோரூம்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் 206 நகரங்களில் இந்த ஷோரூம்கள் இயங்கி கொண்டுள்ளன.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

தற்போதைய நிலையில் எஸ்-க்ராஸ், பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் உள்ளிட்ட கார்கள் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், எஸ்-க்ராஸ்தான் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட தொடங்கிய முதல் கார். இதன்பின் பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் ஆகிய கார்களும் இணைந்தன.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

4 ஆண்டுகளில் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக ஏறத்தாழ 10 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) வாடிக்கையாளர்களுடன் இன்னும் வேகமாக வளர தொடங்கியுள்ளது நெக்ஸா. இந்த சூழலில் மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 (Maruti Ertiga XL6) காரின் விற்பனையும் வெகு விரைவில் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளது.

மாருதி சுஸுகியின் இமேஜை உயர்த்தியதே இதுதான்... இந்தியாவில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது நெக்ஸா!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற மற்றும் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்றான எர்டிகாவின் பீரிமியம் 6 சீட்டர் வேரியண்ட்தான் எர்டிகா எக்ஸ்எல்6. வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 12 லட்ச ரூபாய் என்ற ரேஞ்ஜில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Maruti Suzuki Nexa Completes 4 Years In India. Read in Tamil
Story first published: Tuesday, July 23, 2019, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X