2019ஐ கலக்க வருகிறது மாருதியின் புத்தம் புதிய இரு மாடல்கள்...
மாருதி சுஸுகி வருகின்ற 2019-20ம் நிதியாண்டில் பெரும் வருவாயை ஈட்டும் நோக்கில், தனது இரண்டு புதிய மாடல் கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

மாருதி சுஸுகி கார் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய இரண்டு மாடல்களை வரும் நிதியாண்டில் இந்தியச் சந்தையில் களமிறக்க தயாராகி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டை விட 2018ம் ஆண்டில் இருமடங்கு உற்பத்தி வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் 7.3 சதவிகிதம் விற்பனையை அந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஸ்விஃப்ட் மாடலை புதிதாக அப்கிரேட் செய்யது வெளியிட்டது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் எர்டிகாவும், நவம்பர் மாதம் இரண்டாவது தலைமுறை எர்டிகாவையும் அறிமுகம் செய்தன. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை வேகன் ஆர் மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது.

2019 மாடல் வேகன் ஆர் அதன் முந்தைய மாடல்களில் இருந்து சற்று மாறுபட்டு, மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட வசதிகளுடன் விற்பனைக்க வந்துள்ளது. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக கொண்டுவரப்பட்ட அதன் மாற்றங்கள் தற்போது அனைவரிடமும் வரவேற்பினைப் பெற தொடங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா, வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து மாருதி சுஸுகி நிறுவனம் தனது தயாரிப்புகளில் மாற்றங்களைச் செய்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மேலும் தனது இரு புதிய தயாரிப்புகளை 2019-20ம் நிதியாண்டில் அறிமுகம் செய்யவிருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அது எந்த வகையான மாடல் என்ற முழுமையான தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

புதிதாக தயாரிக்க உள்ள வாகனங்களை BSVI எமிஸ்ஸன் தொழில்நுட்பத்தில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தனது முந்தைய தயாரிப்புகளைக் காட்டிலும் புதிதாக வெளிவரவிருக்கும் மாடல்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஏழு பேர் அமரும் வசதிக்கொண்ட குளோபல் விடாரா மாடலை அப்கிரேட் செய்து மாருதி சுஸுகி நிறுவனம், அதனை 2020ம் ஆண்டுக்குள் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டாவுக்கு போட்டியாக களமிறங்கவில்லை, அது தனது சொந்த தயாரிப்பான விடாரா ப்ரெஸ்ஸா விற்பனையை முறியடிக்கவே தனது புதிய தயாரிப்புகளை சந்தையில் வெளியட உள்ளது.

மேலும், மாருதி சுஸுகியின் புதிய தயாரிப்புகள் வெளிவந்த பிறகு தான் தெரியும், புது வரவு மாடல் கார்கள் எந்த வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று.


Click it and Unblock the Notifications







