மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் சொகுசு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவின் 7 சீட்டர் கார்களில் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

இந்த நிலையில், அடிக்கடி நீண்ட தூரம் பிராயணம் மேற்கொள்வோருக்கு ஏதுவாக சொகுசு இருக்கைகள் கொண்ட எர்டிகா காரை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அடுத்த மாதம் 21ந் தேதி இந்த சொகுசு எர்டிகா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

மாருதி எர்டிகா 6 சீட்டர் மாடலில் நடு வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட இருக்கின்றன. அடிக்கடி வெளியூர் செல்லும் வர்த்தகர்கள், தொழிலதிபர்களுக்கு இந்த மாடல் சிறந்த தேர்வாக அமையும். மேலும், சொகுசாக பயணிக்க விரும்புவோருக்கும் இந்த மாடல் சரியான சாய்ஸாக இருக்கும்.

மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

ஏனெனில், இந்த வகை மாடல் சந்தையில் டொயோட்டா இன்னோவா கார்தான் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. ஆனால், பட்ஜெட் அதிகம் என்பதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு அது எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அந்த குறையை மாருதி எர்டிகா 6 சீட்டர் மாடல் பூர்த்தி செய்யும்.

மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய மாருதி எர்டிகா 6 சீட்டர் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.புதிய மாசு உமிழ்வு விதிமுறையால் டீசல் மாடல் அறிமுகம் குறித்து சந்தேகம் நிலவுகிறது.

மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

சாதாரண எர்டிகா காரில் இருந்து வேறுபடுத்தும் விதமாக சற்று பெரிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர் மற்றும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற இருக்கின்றன. பெரிய வீல் ஆர்ச்சுகள், சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் ரெயில்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

மாருதி எர்டிகா க்ராஸ் 6 சீட்டர் மாடல் அறிமுக தேதி விபரம்

சாதாரண மாடலைவிட விலை அதிகம் கொண்ட டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2019, 17:47 [IST]
English summary
According to a media report, a 6 seater version of the Maruti Ertiga is likely to be launched in india on August 21, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+