ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாட்டின் ஜாம்பவான வாகன உற்பத்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்திய ஆட்டோமொபைல்துறை நடப்பு ஆண்டு தொடங்கிய முதல் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் விற்பனை வீழ்ச்சி மற்றும் நிதியிழைப்பைச் சந்தித்து வருகின்றது.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்திய வாகனத்துறையின் இத்தகைய நிலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தவகையில் பண மதிப்பிழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியிருந்தார். அப்போது, "ஓலா மற்றும் ஊபர் ஆகியவற்றின் அதிக புழக்கத்தின் காரணமாக இந்திய வாகனத்துறை மந்த நிலையைச் சந்தித்து வருவதாக கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், இளைஞர்கள் இஎம்ஐ செலுத்தி வாகனத்தை வாங்குவதற்கு பதிலாக பொதுவாகனங்களைப் பயன்படுத்துவதன் காரணமாகவும் இத்தகைய சூழல் நிலவி வருகின்றது என்று கூறியிருந்தார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

அமைச்சரின் இந்த பதில் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆகையால், இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் இந்திய இயக்குநர் சஷாங் ஸ்ரீவஸ்தா பதிலளித்துள்ளார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

அதில், "ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அப்போது, இந்த மந்த நிலை இந்தியாவில் நிலவவில்லை. அதேசமயம், தற்போதைய விற்பனைச் சரிவு கடந்த 2018ம் ஆண்டு இறுதியின்போதே தொடங்கியது. இதன் வீரியம் நடப்பு ஆண்டு முதலே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது" என்றார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

மேலும் பேசிய அவர், "ஓலா மற்றும் ஊபர் இந்தியாவில் கால் தடம் பதித்தபோது, பெரும்பாலான இளைஞர்கள் அதில் இணைந்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். எனவே, அப்போது இந்திய வாகனத்துறை நல்ல வளர்ச்சியை அடைந்தது" என தெரிவித்தார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

தொடர்ந்து ஓலா, ஊபர் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தற்போதைய இந்தியா வாகனத்துறையின் மந்தமான நிலைக்கு காரணம் என்று முழுமையாக கூறிவிட முடியாது. இதனை நாம் ஆராய்ந்து பார்த்துவிட்டுதான் கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதுவரை காணாத அளவிலான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, தற்காலிக பணியாளர்களை வெளியேற்றுதல், உற்பத்தியைக் குறைத்தல் உள்ளிட்ட பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2019, 15:21 [IST]
English summary
Maruti Suzuki Replies For Nirmala Sitharaman Quotes. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+